உலகத்தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் எமது மக்கள் மரபுவழி பண்பாட்டு விழுமியங்களோடு ஒன்றிணையக்கூடிய பெரு மண்டபம் ஒன்றினை அமைக்க சட்டரீதியான அனுமதி கிடைக்கப் பெற்றதன் அடிப்படையில் கடந்த ஆண்டு 2021ஆவணி 25 அன்று ‘தமிழில்லம்’ அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றதை அனைவரும் அறிந்திருப்பீர்கள்.

இப்பெரு மண்டபம் அனைத்து தமிழர்களுக்கும் உரித்தான மாபெரும் மண்டபமாகச் செதுக்கப்படும் என்பதில் எமக்கு அசைக்கமுடியாத உறுதிப்பாடு உள்ளது.

அந்த வகையில் இங்கே அமையவிருக்கும் ‘தமிழில்லம்’ பெரு மண்டப கட்டிடத்திற்கான கட்டுமானப் பணிமுன்னெடுப்புகள், விளக்கவுரைகள்,
மற்றும் ஆலோசனைக் கருத்தறிதல் தொடர்பான சிறப்புச் சந்திப்பானது பிரித்தானியாவின் சவுத் கரோ பகுதியில் நடைபெறவுள்ளது.

உலகின் பலம்பொருந்திய நாடொன்றின் முற்றத்தில் தமிழர்களுக்குச் சொந்தமான 108 ஏக்கர் வளாகத்தில் இப்பெரு மண்டபத்தை அமைத்து எமது பண்பாட்டு அடையாளங்களைப் பேணிப் பாதுகாத்து, தமிழர் தொன்மைமிகு வரலாறுகளை உலகறியச் செய்வோம் எனும் உயரிய குறிக்கோளுடன் உங்கள் ஒவ்வொருவரின் கரங்களையும் அன்புரிமையோடு பற்றிக்கொண்டு அழைக்கின்றோம்.

நன்றி.

நேரம்: மாலை 3.00 தொடக்கம் 6.00 மணி வரை
நாள் 03/07/2022
இடம்.
St. Andrews Church,
89 Malvern Ave,
Harrow
HA2 9ER
தொடர்புகளுக்கு: 07957991401

07877949882

‘உலகத் தமிழர் வரலாற்று மையம்’

முந்தைய கட்டுரைகரும்புலிகள் நாள் 2022
அடுத்த கட்டுரைகரும்புலிகள் நாள் 2022 நாயகன்

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்