.

இப்படி ஒரு வீரத்தமிழ்ப் பிள்ளையை இனி எம்போது எம்மினம் கண்களால் பார்க்கும்?

இவன் தனக்காக வாழவில்லை . தன் குடும்பத்துக்காக மட்டுமே வாழ்வை அர்ப்பணிக்கத் துணியவில்லை. தனது சாதி தனது மதம் தனது பாடசாலை தனது ஊர் என்று தம் இளமைக் காலத்தை துறக்கவில்லை.
இவனது வாழ்வும் சாவும் எதற்காக நடந்தது என்பதை எம் மக்கள் புரிந்து கொண்டு செயலாற்றாத வரைக்கும் இவர்களின் ஆன்மா அமைதி அடையாது.
இவனைப் போல பலபத்தாயிரம் ஆன்மாக்களும் இலட்சிய வேட்கையின் அமைதிக்காக அலைந்து திரியும்.
தாம் மீண்டும் மண்ணில் பிறந்து செயலாற்ற துடிக்கும்.

தம்மையும் மறந்து இலட்சியம் நோக்கி செயலாற்றவும் மறந்து என்னவென்றே அறியாத வெற்று வாழ்க்கையை வாழ்ந்து வரும் எம் அனைவரது பிள்ளைகளாகவும் வந்து பிறப்பார்கள்.

அவர்கள் மீண்டும் எம் அனைவருக்கும் கற்றுத் தருவார்கள்.
நாம் எதற்காக உணவும் உணர்வும் தந்து உருவாக்கப்பட்டோம் என்பதையும் எமது உள்ளம் உயிர் உடல் உடைமை அனைத்தையும் அர்ப்பணிப்பது எவ்வாறு என்பதையும் ஒற்றுமையாக தாயகம் நோக்கி பயணிப்பது செயற்படுவது எப்படி என்பதையும் இவற்றுக்கெல்லாம் இடையூறாக உள்ள களைகளை அகற்றுவது எப்படி என்பதையும்…
அதுவரை எந்த வீரனுக்கும் விளக்கேற்றி மலர் தூவும் அருகதை கூட எமக்கில்லை.

முந்தைய கட்டுரைஅம்மணி சந்திரிக்காவின் இனவெறி
அடுத்த கட்டுரைஐரோப்பிய மண்ணில் ஓர் வரலாற்று நிகழ்வு

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்