2009 இறுதிப்போரின் இறுதிக்கணங்களில் போது எதிரியுடன் தீரத்துடன் போராடி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களுள் கண்டறியப்பட்டு உறுதிப்படுத்தப்பட்ட 22 மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வுகள் சம நேரத்தில் ஐரோப்பாவில் 11.09.2022 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றிருந்தன. தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் கட்டமைப்பினால் ஆரம்பித்து தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த இந்த நிகழ்வு இம்முறையும் நான்காவது தடவையாக தமிழீழ மாவீரர் பணிமனையின் ஒழுங்குபடுத்தலில் பிரான்ஸ் பாரிஸ் மாநகரில் நடைபெற்றது. நிகழ்வில் திரு கிருஷ்ணா அவர்கள் தலைமை ஏற்க முதல் நிகழ்வுகளாக பொதுச் சுடரேற்றி பிரெஞ்சு தேசியக்கொடியும் தமிழீழத் தேசியக் கொடியும் ஏற்றி வைக்கப்பட்டன.

தொடர்ந்து அனைத்து மாவீரர்களுக்குமான பொது திருவுருவப்படத்துக்கான ஈகைச்சுடர் ஏற்றி மலர்மாலையினை திரு. செபமாலை அவர்கள் அணிவித்தார்.

தொடர்ந்து நிகழ்வின் காவியநாயகர்கள் 22 மாவீரர்களதும் திருவுருவப் படங்களுக்குமான ஈகச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவிக்கப்பட்டன.
மாவீரர் கோமதி அவர்களுக்கு திரு.சத்தியநாதன்.மாவீரர் வளர்மான் அவர்களுக்கு திருமதி.சக்தி.மாவீரர் பிருந்தா அவர்களுக்கு திருமதி. சுபா.
மாவீரர் மலரினி அவர்களுக்கு திருமதி. குட்டியா. மாவீரர் புலியரசன் திரு. கி.கண்ணன்.
மாவீரர் வீரப்பன்/தமிழமுதன் அவர்களுக்கு
திரு.விமல். மாவீரர் கோவிந்தராஜ் அவர்களுக்கு
திரு. நேசன். மாவீரர் அருள்வேந்தன் அவர்களுக்கு திரு.கோபு. மாவீரர் கலைச்செழியன் அவர்களுக்கு திரு.செல்லப்பா. மாவீரர் ராஜேஸ்/ சுதா அவர்களுக்கு சகோதரன் திரு.சித்திரன்.மாவீரர் சஞ்சனா அவர்களுக்கு திருமதி.தூயவள். மாவீரர் வான்முகிலன் அவர்களுக்கு திரு. பஞ்சசீலன் மாவீரர் ரமணா அவர்களுக்கு செல்வன் டிசாந்தன். மாவீரர் தேவராஜ் அவர்களுக்கு மு. கண்ணன்
கரும்புலி மாவீரர் கிந்தஸ்தானி/வேங்கை அவர்களுக்கு திருமதி. தீபா மாவீரர் ராஜேஸ் அவர்களுக்கு திரு. எட்வின். மாவீரர் மலர்சிட்டு
செல்வி. சியாமளா. மாவீரர் சஞ்சிகா அவர்களுக்கு செல்வி மீனா மாவீரர் சுகி அவர்களுக்கு திரு. வர்ணன். மாவீரர் தர்சா அவர்களுக்கு கபிஷன் மாவீரர் தர்சினி. அவர்களுக்கு திருமதி. ஆனந்தி மாவீரர் வள்ளி அவர்களுக்கு கவிதா ஆகியோர் ஏற்றி மதிப்பளித்தனர்.

தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் மாவீரர்களுக்கான மலர் வணக்கத்தினை செலுத்தினார்கள்.

தொடர்ந்து மாவீர்களுக்கான நினைவுக் குறிப்புகள் செல்வி மீனா திருமதி விமலினி ஆகியோரால் வாசித்தளிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து தமிழ் தேசிய செயற்பாட்டாளர் திரு பொன்.நாயகன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

தொடர்ந்து திருஉருவப்படங்கள் உரியவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

தொடர்ந்து கோஷப் பாடல் ஒலிக்க விடப்பட்டு தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு நிகழ்வு நிறைவுற்றது. மண்ணுக்காக மறைந்தவர்களின் மாண்பு பேணப்படுவது மரபாகும் என்பது மெய்ப்பிக்கப்பட்டது. நிகழ்வில் போராளிகள் செயற்பாட்டாளர்கள் ஆதரவாளர்கள் பலர் கலந்துகொண்டு மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினர்.

முந்தைய கட்டுரைஆணிவேர் அறுபடாத ஆலமரங்கள். மீண்டும் வேர் விடுவார்கள்
அடுத்த கட்டுரைதியாகப்பயணத்தில் 1ம் நாள்

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்