.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது மரபுவழி இராணுவப் படையணியான சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் தளபதியாகி பல வெற்றிச் சமர்களுக்கெல்லாம் கட்டளைத் தளபதியாக நேரில் நின்று நெறிப்படுத்தி வென்றுதந்த சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 13வது ஆண்டு நினைவுநாள் அவருடன் களமுனைகளில் நேரடியாக நின்று களமாடிய போராளிகளால்
20/05/2022 நேற்றைய தினம் ஐரோப்பிய நேரம் இரவு 10,30 மணியளவில் நினைவுகூரப்பட்டு வணக்க நிகழ்வும் நடைபெற்றது.
இவ் வணக்க நிகழ்வு மிகவும் எழுச்சியாகவுவும் உணர்பூரமாகவும் நடைபெற்றது.

பிரித்தானியாவில் அமைந்துள்ள உலகத்தமிழர் வரலாற்றுமைய வளாகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவு மண்டபத்தில், சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் திருவுருவப்படம் வைக்கப்பட்டு, ஈகைச்சுடர் ஏற்றி, மலர் வணக்கம் செய்யயப்பட்டு அவருக்கான 14 ம் ஆண்டு நினைவு வணக்கம் நடைபெற்றது. சம நேரத்தில் பல நாடுகளிலுமிருந்தும் இணையவழி ஊடாக பால்ராஜ் அண்ணாவுடன் நேரடியான களமுனை அனுபவங்களையும் அவருடைய நிர்வாக நெறிப்படுத் தல்களையும் நினைவுப் பகிர்வுகளாக போராளிகள் வழங்கியிருந்தார்கள். சமர்க்கள நாயகன் பற்றிய கவிதை ஒன்றும் கண்ணீர் மல்க வழங்கப்பட்டது.

தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளர் தயாமோகன், நிர்வாகப்பொறுப்பாளர் தமிழரசன் உட்பட ஆலோசனை சபையிலிருந்து மூத்த போராளிகள், தேச உணர்வாளர்கள் என 55க்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்ட இந்த நினைவு வணக்க நிகழ்வு மிகவும் உணர்வுபூர்மாக நடைபெற்றது.

சமநேரத்தில் யாழ் மாவட்ட தளபதி லெப்கேணல் ராதா அண்ணா மற்றும் அதே நாளில் வீரச்சாவை தழுவிக் கொண்ட அத்தனை மாவீரர்களையும் நெஞ்சில் சுமந்தும் இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

‘பால்ராஜ்’தமிழர் வீரத்தின் அடையாளச் சின்னம்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்