இது அந்த அமைப்பு செய்யுது இந்த அமைப்பு செய்யுது என்று ஒதுங்கி ஓரமாக வேடிக்கை பார்க்காமல் நானும் தமிழன் எனக்கும் கடமை உாிமை இருக்கு என்று எல்லாரும் இறங்குங்கள்.
அமைப்புக்களுக்கும் சின்னங்களுக்கும் அப்பால் நாம் முதலில் மனிதர்கள் அதிலும் தமிழீழத் தமிழர்கள். எங்களுக்கென்று தனித்துவம் இருக்கு. சும்மா வாயால வடைசுடாமல் களத்தில் இறங்குங்கள். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி என்பதே ஈழத் தமிழர்களின் கையிலுள்ள இலக்கு நோக்கிய பயணத்தின் முதற்படி . இதையும் நாம் அசட்டை செய்தால் நாங்கள் மாவீரா்களுக்காக தீபம் ஏற்றவோ மலர் சூட்டவோ தகுதியற்றவர்கள். புாிந்து கொள்ளுங்கோ . இது இன விடுதலைக்கான கடைசி ஆயுதம் . இதற்காக நாம் ஓரணி சேராவிட்டால் இனி இன விடுதலைப் பேச்சே வியாபாரம் என்பதாகும். எமது மக்களே கைவிட்ட கோாிக்கையாக அது போய்விடும். பின்னர் எந்த சர்வதேசம் எமக்கு நீதி வழங்கும்? வாருங்கள் எமக்காக உள்ள ஒரே களம் இது. எண்ணிக்கைக்காகவாவது உங்கள் தலைகள் தொியட்டும்.

முந்தைய கட்டுரைதமிழ்த் தேசிய உணர்வாளர் நெல்லைக்கண்ணன்
அடுத்த கட்டுரைகாணாமல் செய்யப்பட்ட தமிழீழ மக்களுக்கு நீதி வேண்டி….நாயகன்

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்