சிங்கள தேசியக்கொடி என்பதே ஈழத்தமிழர்களை பொறுத்தவரை ஒடுக்குமுறையின் ஒரு அடையாளம்…எம்மை கொன்று எரித்து அந்த சாம்பல்மேட்டிலே அந்த கொடியை நாட்டி புளகாங்கிதம் அடைந்தார்கள் சிங்கள காடையர்கள் ..இந்த செயலை அங்கீகரிக்கும் வகையில் சிங்கள தேசத்தினை சேர்ந்த பெரும்பாலானோர் பால்ச்சோறு ஊட்டி அகமகிழ்ந்தார்கள்…அத்தோடு இக்கொடியானது தமிழர்களது பங்களிப்போடு உருவானதல்ல எமது பரிந்துரைகள் கூட புறக்கணிக்கப்பட்டன..சிங்களபெளத்த பேரினவாத மேலாதிக்க சிந்தனையின் ஓர்வடிவம்…அன்றைய காலகட்ட தமிழ்த்தலைவரான S.J.V.செல்வநாயகம் அவர்கள் வெளிப்படையாகவே இந்தக்கொடியை ஏற்றுக்கொள்ளவில்லையென பேரறிவிப்பு செய்தார்..ஆகவே இந்தக்கொடியை தூக்கிப்பிடித்துக்கொண்டு அதன் நிழலின் கீழான போராட்டத்தில் எந்தக் காலத்திலும் ஈழத்தமிழர்களால் பங்குகொள்ள முடியாது.. காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளாததால் நந்தசேன கோட்டபாய ராஜபக்ஷ க்கு ஈழத்தமிழர்கள் ஆதரவானவர்கள் என்று வியாக்கியானம் செய்வது பொருத்தமற்றது.. காலிமுகத்திடலில் பங்குபற்றினால் தான் அது போராட்டம் என்றல்ல..கோட்டாபாய உட்பட ராஜபக்ஷ குடும்பத்தை வாக்கு எனும் ஆயுதத்தால் ஒரு தசாப்த காலத்துக்கு மேலாகவே தொடர்ந்தேர்ச்சியாக வெளிப்படையாக எதிர்த்து புறக்கணித்துள்ளோம்…இப்பொழுது எல்லோரும் go home gotta என்கிறார்கள் தமிழர்களாகிய நாம் அதைவிட ஒருபடி மேலேபோய் பல ஆண்டுகளுக்கு முன்பே Gotta Go ICC என முழக்கமிட்டவர்கள் ..தமிழர்களாகிய நாம் galle face க்கு அலைதிரளாக வந்து பங்களிக்கிறோம் என வைத்துக்கொள்வோம் அதேபோல may 18 அன்று சிங்களவர்கள் முள்ளிவாய்க்கால் வருவார்களா???இன்றைய தமிழ்த்தலைமுறை பிள்ளைகளாகிய நாம் கடும்போக்காகத்தான் தமிழ்த்தேசியத்தை நகர்த்திசெல்வோம் ஏனெனில் தமிழர்களாகிய நாம் சிறுபான்மையினம் அல்ல நாம் ஒரு தனித்துவமான தேசிய இனம்.. இலங்கையில் இடம்பெறுவது தேசிய இனப்பிரச்சினை..நீங்கள்(சிங்களவர்கள்) எங்களது இரண்டு கைகளையும் வெட்டி துண்டாக்குவீர்கள் சிலகாலம் கழித்து எங்கட பெயரை(சிங்களம்) சொல்லித்தான் வெட்டினவங்க அதுபிழைமாதிரித்தான் இருக்கு நடந்ததுநடந்துபோச்சு உங்களுக்கு மோதிரம் பரிசாக கொண்டந்து இருக்கிறம் என்று சொல்ல நாங்க சந்தோஷப்படனுமா?? குறைந்தபட்சம் வெட்ட ஆயத்தமானபோதாவது (நான்காம்கட்ட ஈழப்போர்) நீங்கள் தெருவுக்கு வந்து குரல் கொடுத்து இருக்க வேண்டாமா??போரின் போது சிங்களஇனவெறி இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட அட்டூழியங்கள் அடங்கிய எண்ணற்ற காணொளிகள்,புகைப்படங்கள் வெளிவந்தனவே அப்பொழுதெல்லாம் எங்கே போனீர்கள் பெளத்த,இஸ்லாமிய முற்போக்குவாதிகளே!!உங்கட வயிற்றுக்கு ஒருபிரச்சினை வந்தவுடன் வெறுமனே gotta வை வீட்டுக்கு அனுப்பனும் என்ட போராட்டத்தில் நாங்க பங்குபற்றவேண்டும் என்கிறீர்களே. .பல தசாப்தங்களாக நாங்கள் பொருட்கள் தட்டுப்பாடு,விலையேற்றம் என்பவற்றுக்கு மத்தியில் தான் வாழ்ந்தோம் எங்களுக்கு மேல் உங்களுடைய சிங்கள அரசாங்கம் பொருளாதார தடையை விதித்தது என்ற விடயமாவது தெரியுமா??எம்தேசம் எம்மவர்களால் ஆளப்படும்போது தன்னிறைவுப் பொருளாதாரத்தின் வழியிலேயே பயணித்தது என்பதாவது தெரியுமா?? போருக்குப்பின்னர் கூட தமிழர்கள் பொருளாதார ரீதியில் வலுவான நிலையை அடையக்கூடாது என்பதற்காக எமது தேசத்தில் ஏற்கனவே இருந்த தொழிற்சாலைகள் கூட கண்டுங்காணாமல் விடப்பட்டன என்பதாவது தெரியுமா??காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை யுத்தம் நடந்தா சின்னாபின்னமானது ஒரு ரவை (bullet) கூட அந்த இடத்தில் சீறவேண்டிய தேவையெழவில்லை ஆனால் அங்கிருந்த உபகரணங்கள் எங்கே?? அதை யார் கழற்றி விற்றார்கள்?? என்பதாவது தெரியுமா??காலிமுகத்திடலுக்கு போகாதது கேடுகெட்ட செயல் என சொல்லுகின்ற ஒருசில தமிழ் பேசும் கனவான்களே! இராணுவத்திடம் பிள்ளைகளை கையளித்துவிட்டு வருடக்கணக்காக தெருவிலேயே போராடுகின்ற போராட்டத்தில் எப்பொழுதாவது கலந்து உங்களது ஆதரவை தெரிவித்துள்ளீர்களா??(galle face ல ஆத்தல் எடுக்கலாம் தாயகத்தில எடுக்கவேலாது)பாதிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட எங்களிடம் மாத்திரம் நல்லிணக்க வகுப்பு எடுக்க முயல்வது அபத்தமானது.

முந்தைய கட்டுரைமஞ்சள் எச்சரிக்கை
அடுத்த கட்டுரைதமிழ்த் தேசிய மேதின நிகழ்வுகள் வடக்கு கிழக்கு மாகாணங்களில்…

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்