தமிழீழ காவல்துறையின் ‘கடமைவீரன்’ரஞ்சித்குமாரின் வித்துடலுக்கு பெருந்திரளான மக்கள் இறுதி வணக்கம். இன்று, 02/04/2022, பிரான்சில் தமிழீழ காவல்துறை முதன்மை ஆய்வாளர் ரஞ்சித்குமார் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு LA COURNEUVE என்னும் இடத்தில் மிகவும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது. இந்நிகழ்வில் திருப்பலியை தொடர்ந்து பொதுச்சுடரினை தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் சுவிஸ் கிளைப் பொறுப்பாளர் குலம் அவர்கள் ஏற்றிவைத்தார். ஈகச்சுடரினை கடமைவீரன் ரஞ்சித்குமார் அவர்களின் சகோதரரான போராளி முகிலன் ஏற்றிவைத்தார். வித்துடலுக்கான மலர்மாலையினை கடமைவீரன் ரஞ்சித்குமார் அவர்களின் துணைவியார், பிள்ளைகள் அணிவித்தனர்.திருவுருவப் படத்திற்கான மலர்மாலையினை கடமைவீரன் ரஞ்சித்குமார் அவர்களின் மைத்துனரான கடற்புலி போராளி புலவர் அணிவித்தார்.

வித்துடலுக்கான தமிழீழ தேசியக்கொடி, தமிழீழ காவல்துறை உறுப்பினர்களான நித்தி,விநாயகமூர்த்தி ஆகியோரால்போர்த்தி மதிப்பளிக்கப்பட்டது. மலர்வணக்கத்தினை கடற்புலி மாவீரர் லெப்.பரந்தாமன் அவர்களின் தாயாரும், நாட்டுப்பற்றாளரான கைடி பொன்கலன் அவர்களின் துணைவியாரும்,கடமைவீரன் ரஞ்சித்குமார் அவர்களின் மாமியாருமான லூட்ஸ் மேரி அவர்கள் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து வீரவணக்க உரைகள் இடம்பெற்றன. வீரவணக்க உரையினை போராளி நாயகன், தமிழீழ அரசியல்துறை போராளி தமிழரசன், உலகத்தமிழ் வரலாற்று மையத்தின் பிரதிநிதி போராளி சங்கீதன், கடற்புலி போராளி மணாளன், கடற்புலி போராளி புலவர் மற்றும் விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளர் மனோகரன் அவர்களும், தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பொறுப்பாளர் சுந்தரவேல், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சார்பாக மேத்தா அவர்களும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பாக கலையரசன் அவர்களும், மகிந்தன் அவர்களும், சென்.

ஜேம்ஸ் பழைய மாணவர் சங்கம் மற்றும் பாடும் மீன்கள் சங்கம் சார்பாக மனுவல் அன்ரன் அவர்களும், ஈழத்தமிழர் திரைப்பட சங்கம் சார்பாக குணா அவர்களும் வழங்கியிருந்தனர். நன்றியுரையினை அவரது செல்ல மகள்களான யாழ்நிலா, எழில் ஓவியா, (அம்மு)தேவ அமிர்தா ஆகியோர் கண்ணீர் மல்க வழங்கியிருந்தனர். தொடர்ந்து கடமைவீரன் ரஞ்சித்குமார் அவர்களின் வித்துடல் கல்லறைக்கு எடுத்துச்செல்லப்பட்டு பெருந்திரளான மக்களால் மலர்தூவி வணங்கப்பட்டு, பாடல் ஒலிக்க மண்போட்டு விதைக்கப்பட்டது. தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஆயுத அமைதியின் பின்னரான அரசியல் வழி போராட்டத்தில் ஒவ்வொருவருக்கும் இருக்கும் பொறுப்புணர்வை இக்கடமைவீரனின் சாவு ஆழமாக அனைவர் மனங்களிலும் பதித்துள்ளது.

தொடர்புடைய காணொளி.....,
தொடர்புடைய காணொளி.....,
தொடர்புடைய புகைப்படங்கள்
அடுத்த கட்டுரைஆனந்தபுர சமர்க்கள நாயகர்கள்………

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்