தமிழ்த் தேசிய மே தின நிகழ்வுகள் வடக்கில் கிளிநொச்சியிலும், கிழக்கில் மட்டக்களப்பிலும் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட கிளையினருடனான சந்திப்பு தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்றது. அதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் எதிர்வரும் 26 ஆம் திகதி தந்தை செல்வாவின் நினைவு தினம் அவரது சமாதியில் இடம்பெற்று நூல் வெளியீடும் நினைவுகளும் இடம் பெறும் என்பதையும் கட்சியின் உறுப்பினர்களை பங்குபற்ற வைப்பது தொடர்பிலும் அத்துடன் வவுனியாவில் நடைபெற்ற கட்சியின் உயர் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் தமிழ்த் தேசிய மே தின நிகழ்வுகள் வடக்கில் கிளிநொச்சியிலும், கிழக்கில் மட்டக்களப்பிலும் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கிளிநொச்சியில் பி.ப 2 மணிக்கு கரடிப்போக்கு சந்தியில் ஆரம்பிக்கும் மேதினப் பேரணியானது டிப்போச் சந்தியில் சென்றடைந்து அங்கு இருக்கும் பூங்காவில் மேதின எழுச்சிக் கூட்டம் நடைபெறும் இந்தப் பேரணியினை தொகுதிக்கிளைகள் மற்றும் மாவட்ட கிளைகள் அனைத்தும் ஒன்றிணைந்து நடாத்துவதற்கும் முடிவுகள் எட்டப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்

முந்தைய கட்டுரைசிங்களத் தேசியக்கொடி ஆக்கிரமிப்பின் சின்னம்.
அடுத்த கட்டுரைமகள்களின் தலைமையில் நடைபெற்ற தந்தையின் நினைவுநாள் நிகழ்வு…

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்