தம்பி! தம்பி!
பாலா!பாலா!
போராளிகள் அவனை இப்படித்தான் அழைத்தனர்,
மாமா!மாமா!
இப்படித்தான் அவன் போராளிகளை கூப்பிடுவான்.
தம்பிக்கு போராட்டமா? அவனுக்கு என்னவென்று புரியாத வயசு!
அம்மாவின் சேவையும் மடியுமே அவனுக்கு தெரியும்.
“உன்னை விடுவார்கள் என நம்பியே அனுப்பி வைத்தோம் தம்பி”
தம்பி! நீ தப்பி இருந்தாலும் எங்களைப்போல் துரோகி என்ற சொல்லை சுமந்திருப்பாய்.
பிஸ்கட் கொடுத்த சிங்கள ஆமியும் மாமா என்றே நினைத்திருப்பான்!!
சுட்டவனையும் மாமாவாகவே உனக்கு தெரிந்திருக்கும்!
தம்பி உன் முகம் எதிரியையே உருக வைக்குமடா!
உன்னையே கொன்றவர்களுடன் உன்னுடைய தாத்தாக்கள் பதின்மூன்று வருடா பேசுகினம்!!!
“தர்மம் ஓர்நாள் வெல்லுமடா தம்பி”
துரோகங்கள் ஓர்நாள் தூசாகிப் போகும் தம்பி!

முந்தைய கட்டுரைமுள்ளிவாய்க்கால் மண்ணில் எம் மக்கள்…..
அடுத்த கட்டுரையாழ்.பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்