நீ ஏற்ற தேசக் கடமையினால் நீ நேசித்த தேசத்திலும் வாழமுடியாது கடமைக்காக வந்த இடத்திலும் இறுதிவரை உன் கடமையை செய்ய வழியற்று நெக்குருகி நின்றிருப்பாய் சோதரனே . இறுதிப் போர் வேளையில் ஈழ இராச்சியம் வீழ்கையிலே உங்கள் இதயங்கள் எப்படியெல்லாம் நொருங்கியிருக்கும்?.


அருகிருந்த போதெல்லாம் உன் அமைதியையும் சிரிப்பையும் மட்டுமே எமக்கு தெரியும். கடமைகளும் கட்டுப்பாடுகளும் அதைவிட அதிகமாக அறிய விடவில்லை. தேசக்கடமைக்காகவும் தேசக்கடனுக்காகவும் இன்னும் மறைவாய் வேகும் உன்போன்றவர்களது தியாகங்களையும் எம் தேசம் நினைவிற் கொள்ளும். சென்று வா சோதரனே. உன் உயிர்க்கொடையாவது ஈழத்தேசத்திற்கானவர்களின் விழிகளைத் திறக்கட்டும். திசை தவறிய விடுதலைப் பறவைக்கு வழிசமைக்கட்டும்.அமைதியடைவாயாக.

இந்த தடமறியா வீரனின் இறுதி நிகழ்வுகள் சனிக்கிழமை நடைபெறும். நிகழ்வில் கலந்து கொண்டு இந்த வீரனுக்கு இறுதிவிடயளிப்போமாக.

முந்தைய கட்டுரைபிரபாகரப் பெருவிழா 2022
அடுத்த கட்டுரைதியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் எட்டாம் நாள்…!

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்