இன்று 02.10.2022 மதியம் 12.30 மணிக்கு நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் அணிவகுத்து நிற்க பொது சுடரை தேசிய செயற்பாட்டாளர் திரு செபமாலை அவர்கள் ஏற்றிவைத்தார். அடுத்து பிரான்சின் தேசியக் கொடியை லாக்குர்நோவ் நகரசபை உறுப்பினர் திருமதி. சுகுர்ணா சிறிகணேஸ் அவர்கள் ஏற்றி வைக்க தமிழீழத் தேசியக் கொடியை தேசியச் செயற்பாட்டாளர் பொன் நாயகன் அவர்கள் ஏற்றிவைத்தார். அடுத்து நாம் தமிழர் கொடியை பிரான்ஸ் நாம் தமிழர் கட்சியின் துணைப் பொறுப்பாளர் திரு. சுகிர் அவர்கள் ஏற்றி வைக்க நிகழ்வுகள் ஆரம்பமாகின.

தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்ட மக்கள் அனைவரும் தமிழீழ வடிவ வளைவுப்பாதையூடாக நிகழ்வரங்கிற்குள் தேசியத்தலைவர் அவர்களின் திருவுருவம் தாங்கியபடி அணிவகுத்து வந்தனர்.

தொடர்ந்து தலைவர் அவர்களை போற்றிய பாடலுக்கான நடனம் சிறார்களால் வழங்கப்பட்டது.

தொடர்ந்து திரையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு சீமான் அவர்களின் உரை திரையிடப்பட்டது.

தொடர்ந்து தலைவர் பிரபாகரன் அவர்கள் வழங்கிய விடுதலை தீப்பொறி திரையிடப்படுகிறது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்