.

எதிர்வரும் மே 18,2022 மாலை 6 மணிக்கு பிரித்தானியாவில் தமிழர்களுக்குச் சொந்தமான நிலப்பரப்பில் அமைந்துள்ள உலகத்தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் ஒன்றுகூடி விளக்கேற்றி, இனவிடுதலைக்காக உயிர்விலைகொடுத்த அத்தனை ஆன்மாக்களின்மீது உறுதியெடுத்து தொடர்ந்து தாயகம் நோக்கிய விடுதலைப்பணியை முன்னெடுக்க ஒன்றுகூடுமாறு அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் வரலாற்று மையத்தில் நடைபெற்று வருகின்றன. முள்ளிவாய்க்கால் இறுதிப்போரின் வலிகளைச் சுமந்த போராளிகளும், மக்களும் நினைவேந்தலுக்கான தயார்படுத்தல்களில் உணர்வுகளோடு ஈடுபட்டு வருகின்றனர். தாயகத்தை விட்டு புலம்பெயர நிர்ப்பந்திக்கப்பட்டபோதும் அவர்களது நினைவுகளும்,
எண்ணங்களும் அந்த மண்ணை, மக்களைவிட்டு புலம்பெயரவில்லை என்பதனை அவர்களது அர்ப்பணிப்பு நிறைந்த செயற்பாடுகள் கட்டியம்கூறி நிற்கின்றன.

முள்ளிவாய்க்கால் என்பது
எமது இனத்தின் விடுதலைக்கான குறியீடு.
முள்ளிவாய்க்கால் என்பது எமது இனத்தின் வலிகளின் கூடாரம்.
முள்ளிவாய்க்கால் என்பது
தமிழர் இனவழிப்பின் சாட்சியம்.

இவை வெறும் நிகழ்வுகள் அல்ல.விடுதலை வேண்டிநின்ற ஓர் இனத்தையும் அதன் விடுதலைக்காக உயிர்கொடுத்துப் போராடிய ஓர் அமைப்பையும், சிங்களப் பேரினவாதமும் அதற்குத் துணைபோன வல்லாதிக்க சக்திகளும் திட்டமிட்டே கொன்றழித்த துயர்தோய்ந்த படுகொலையை நினைவுபடுத்தும் கொடியநாள்.

இறுதிவரை இனத்தின் விடுதலைக்காக உறுதிதளராது போராடி அந்த மண்ணிலே விதையாகிப்போன பல்லாயிரக் கணக்கான போராளிகளினதும்,
விடுதலையின்பால் அதற்குத் துணையாய் வழிநடந்த மக்களில் கொத்துக் குண்டுகளாலும் நச்சுக்குண்டுகளாலும் கொல்லப்பட்ட ஒரு லட்சத்து நாற்பத்தியாறியிரத்துக்கும் மேற்பட்ட மக்களினதும் இழப்புக்களுக்கு நீதிகேட்டு தொடர்ந்து எமது உரிமைகளுக்காக மடிந்த வீரர்களின் கொள்கைகளைச் சுமந்தபடி பயணிக்கும்
ஈழத்தமிழினத்தின் வலிசுமந்த துயரநாளை பிரித்தானியாவின் தமிழர்களுக்குச் சொந்தமான வரலாற்றுமைய வளாகத்தில் ஆண்டுதோறும் பெருந்திரளான எமது உறவுகள் மே18 அன்று ஒன்றுகூடி நினைவேந்தல் செய்துவருவது குறிப்பிடத்தக்கது.

‘வலிகளிலிருந்து வலிமை பெறும் ஈழத்தமிழினம்’

முந்தைய கட்டுரைமகள்களின் தலைமையில் நடைபெற்ற தந்தையின் நினைவுநாள் நிகழ்வு…
அடுத்த கட்டுரைதமிழினப் படுகொலை நாள் நினைவு உரை மே 18 2022 பொன். நாயகன்

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்