பிரித்தானியாவின் ஒக்ஸ்போட்டில் தியாகதீபத்தின் நினைவாகவும் தமிழீழ வான்படையின் சிறப்புத்தளபதி கேணல் சங்கர் உட்பட புரட்டாதி மாதங்களில் வீரச்சாவை அணைத்துக்கொண்ட மாவீரர்களை நினைவேந்தியும் வணக்க நிகழ்வு தமிழீழ மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இதேவேளை 1995 இல் இதேமாதம் 22ம் நாள் நாகர்கோவில் பாடசாலைமீது சிறிலங்காவின் புக்காரா குண்டுவீச்சு விமானங்களின் மிலேச்சத்தனமான தாக்குதலில் படுகொலைக்குள்ளான 21 பள்ளிச்சிறார்களும் நினைவுகூரப்பட்டனர்.

மாலை 3 மணிக்கு ஆரம்பமான நிகழ்வில் பொதுச்சுடரினை ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் சிவகுருநாதன் அவர்களும்,
செல்வன் கபிலன்,திருமதி அபிராமி ஆகியோரும், வரலாற்று மையத்தைச் சேர்ந்த திரு சுபன்,திரு உதயன் ஆகியோர்களும் ஏற்றிவைத்தனர்.

பொது மாவீரர் திருவுருவப் படத்துக்கான ஈகச்சுடரினை திரு வீரன் அவர்கள் ஏற்றிவைக்க மலர் மாலையினை திரு விஜிதரன் அணிவித்தார்.

தமிழீழ தேசியக்கொடியினை வரலாற்று மையத்தைச் சேர்ந்த திரு ஆடலரசன் அவர்கள் ஏற்றிவைத்தார்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து தியாகதீபம் திலீபன் அவர்களின் திருவுருவப் படத்துக்கான ஈகச்சுடரினை திரு சுரேஸ் அவர்கள் ஏற்றிவைக்க மலர்மாலையினை இளையோர் சார்பாக செல்வன் ஜெபநேசன் அணிவித்தார். தொடர்ந்து மாவீரர்களின் குடும்பத்தினர் உரித்துடையோர் ஈகச்சுடரேற்றி மலர்வணக்கத்தை தொடக்கிவைக்க வருகைதந்த மக்கள்,போராளிகள்,அரசியற் செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து தமது மலர்வணக்கத்தை செலுத்தினர்.

மாவீரர்களின் வீரஞ்செறிந்த நினைவுப் பகிர்வுகளை சம காலங்களில் போராளிகளாக பயணித்த திரு சங்கீதன் மற்றும் அமுதன் ஆகியோர் நினைவுருகப் பகிர்ந்தனர்.
(காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது)

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்