நேற்றைய தினம் 18 மே 2022 முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் நினைவு கவனயீர்ப்புப் போராட்டத்தில் பிரான்ஸ் காவல்துறையினரால் தமிழீழத் தேசியக்கொடிக்கு அனுமதி மறுக்கப்பட்டமை தொடர்பிலாக எழுதப்பட்ட சிறு பதிவு.

கடந்த 13 வருடங்களாக தமிழர்களுக்குள் நிலவி வந்த நான் சரி நீ பிழை என்கிற மன நிலை எமது போராடிய சமூகத்தின் செயற்றிறண் மற்றும் செறிவை குறைந்திருந்தது. இதனால் அடுத்த தலைமுறைத் தலைமைகள் உருவாக இடமளிக்கப்படவில்லை . இதனை செய்திருக்க வேண்டிய பொறுப்பான நிலையில் இருந்தவர்களின் தலைமறைவும் சுயநலன் நடவடிக்கைகளும் சரியானவர்களின் கைதுகளும் இந்த நிலை உருவாக காரணம். இதுவரை சம்பிரதாய நிகழ்வுகளை மட்டுமே நடத்திவந்த உணர்வாளர்களின் இயலாமை கூட. ஒரு தேசத்தின் அதன் மக்களின் தலைவிதியை பாதுகாக்கும் பொறுப்பில் நாம் இருக்கிறோம் என்பது அந்த பொறுப்பில் இருப்பவருக்கும் புரியாமை. அதனால் தகுதியானவர்களைக் கண்டு பிடித்தோ அல்லது உருவாக்கியோ விட இடமளிக்காமை. இது உள் முரண்பாட்டு அரசியல்.

அண்மைய சூழ்நிலைகள் தமிழ் மக்களதும் தலைமை தாங்கும் அமைப்புக்களதும் ஒற்றுமையினை வலியுறுத்துவதாக உள்ளன. அதனை உரியவர்களும் உணர்ந்துள்ளனர்.
நேற்றைய நிகழ்வில் அனைத்து தரப்பும் இதயப்பூர்வமாக இணைந்து நிகழ்வினை நடாத்த முற்பட்டிருந்தது அனைவருக்கும் தெரியும். இருந்தாலும் அவர்களுக்குள் ஒரு ஒருங்கிணைவு சரியான முறையில் ஏற்பட்டிருக்கவில்லை. ஆதலால் ஏற்பாடுகள் முழுமையான நிலையில் பூர்த்தியாக்கப் பட்டிருக்கவில்லை . மாற்று ஏற்பாடுகளும் இருக்கவில்லை.
கடந்த காலங்களில் இந்நிகழ்வுக்கு வருபவர்கள் அனைவருமே தீவிர ஆதரவாளர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். எதிரிக்கும் இந்நாட்டு அரசாங்கத்திற்கும் அவ்வாறே. குழப்ப நிலைகளை அனுமதித்த அரசுகள் இப்போது ஒற்றுமை உருவாகும் நிலையை ஏற்க விரும்பவில்லை போலும். எனவே எமது ஒருங்கிணைவு கான மையத்தினை அவர்கள் இல்லாமல் செய்ய விரும்புகிறார்கள் அது எங்கள் தேசியம் சார்ந்த அடையாளங்கள். அதிலும் தமிழீழத் தேசியக்கொடி.

இதனை சட்டரீதியாக எவ்வாறு எதிர்கொள்வது என்பதற்காக வாவது அனைத்து தரப்புகளும் ஓரிடத்தில் அமர்ந்து சரியான வழிமுறைகளைக் கண்டு அதற்காக மக்களை மீண்டும் அணிதிரட்டி எமது உரிமையை நாம் மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். பொது வெளியில் வெறுமனே வீர முழக்கங்கள் செய்வதில் எதுவுமே நடந்து விடப்போவதில்லை. திட்டமிடல்களும் செயல்களும் அதற்கான அர்ப்பணிப்பும் அவசியமானவை.
மிக விரைவில் முள்ளிவாய்க்கால் நாட்களின்பின் எமது முதன் முயற்சியாக சட்டரீதியாக இந்த வெற்றியை நாம் பெற்றே ஆகவேண்டும். இதனை வெறும் வாய்ச்சொல்லில் அல்லாமல் வெற்றிகரமாக செய்து முடிக்கக்கூடிய தலைமைகளை உருவாக்கி அதனை அனைவரும் ஏற்று செயல்படவும் வேண்டும். இல்லையெனில் காலமும் மக்களும் ஏன் மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் மரணித்த மாவீரர்களின் மகா சக்தியான இந்த இயற்கையும் நம்மை புறக்கணித்து விடும்.
தமிழர்கள் கையாலாகாதவர்கள் என்ற இழிநிலை வரலாற்றில் பதியப்படும். அதற்கு நாமும் காரணமாக அமைவோம்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்