தியாகதீபம் லெப் கேணல் திலீபன் நினைவு சுமந்து பிரித்தானியாவில் கோடைகால விளையாட்டு போட்டி நேற்று 04/09/2022 காலை 10 மணிக்கு தமிழீழ தேசியக்கொடி ஏற்றலுடன் தொடங்கியது.
எமது தாயகம் அந்நிய சக்திகளின் சதிச்செயல்களால் துண்டாடப்பட்டும் எம்மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டும் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டபோது அதற்கெதிராக ஐந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து
அகிம்சைப் போரை கையிலெடுத்த தியாகதீபம் திலீபன்
இந்திய-சிங்கள கூட்டுச்சதியால் கோரிக்கைகள் நிறைவேற்றப்படா நிலையில் 12 நாட்கள் நீராகாரம் எதுவுமின்றி நல்லூர் முருகப்பெருமான் ஆலய முன்றலில் மெழுகுபோல் உருகி
இலட்சியப்பற்றோடு சாவை அணைத்துக்கொண்டார்.
அந்த உயரிய இலட்சியவீரனை நினைவுறுத்தி இவ்விளையாட்டு பிரித்தானியாவில் கடந்த ஏழு வருடங்களாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இறுதிப்போரின் போது மக்கள் படுகொலை செய்யப்படுவதை தடுத்துநிறுத்தக்கோரி ஐக்கிய நாடுகள் முன்றலில்
தன்னுடலில் தீயை பற்றவைத்து ஆகுதியாகிய ஈகப்பேரொளி முருகதாசனின் தாயார் திருமதி வர்ணகுலசிங்கம் புவனேஸ்வரி அவர்கள் நினைவுச்சுடர் ஏற்றிவைக்க இந்நிகழ்வு உணர்வுபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தமிழீழ தேசியக் கொடியை நீண்டகால தேசியச் செயற்பாட்டாளர் திரு பரணி அவர்கள் ஏற்றிவைத்தார்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை துணை அமைச்சர் திரு நீதிராசா அவர்களின் தலைமையில் நடைபெற்றற இவ்விளையாட்டு நிகழ்வில் உலகத் தமிழர் வரலாற்று மையம் உட்பட பிரித்தானியாவின் பல்வேறு அமைப்புகளினதும் பிரதிநிதிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

பிரித்தானியாவின் பல்வேறு விளையாட்டுக் குழுக்களும் பங்குபற்ற மாபெரும் நிகழ்வாக இவ்விளையாட்டு நிகழ்வு மக்களின் உற்காக வரவேற்புகளுடன் சிறப்புற நடைபெற்றது.

முந்தைய கட்டுரைஏன் நாங்கள் நீதி கேட்க வந்தோம்…
அடுத்த கட்டுரைஅம்மணி சந்திரிக்காவின் இனவெறி

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்