வல்வெட்டித்துறை நீச்சல் தடாகம்
ஆழிக்குமரன் ஆனந்தன் ஞாபகார்த்த நீச்சல் தடாகம் இன்று முதல் பொது மக்களின் பாவனைக்கு விடப்பட்டுள்ளது. நீச்சல் தடாக பொறியியலாளர்களின் ஆலோசனையின் அடிப்படையில் பல நாட்களாக சுத்திகரிக்கப்பட்டு நீரின் தரம் பரிசோதிக்கப்பட்டது. இத்தடாகத்துக்கு தற்போது கிணறுகளில் இருந்து நீர் தருவிக்கப்படுகின்றது. நகரசபை தவிசாளர் செல்வேந்திரா அவர்கள் கடல் நீரை சுத்திகரிக்கும் RO நீர் செயலி (Reverse Osmosis plant) ஒன்றை விளையாட்டு அமைச்சு ஊடாக பெறுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றார்.
நீச்சல் தடாக வாடகை கட்டணமாக, பாடசாலை மாணவருக்கு Rs.100.00, பொது மக்களுக்கு (முதல் ஒரு மணித்தியாலத்துக்கு ) Rs 250.00 அடுத்து வரும் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் Rs.150.00 உம் நகரசபையினால் அறவிடப்படுகின்றது. இன்று 30க்கு மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வத்துடன் நீச்சல் தடாகத்தில் நீராடியது குறிப்பிடத்தக்கது.
