வீரவணக்கம் நாட்டுப்பற்றாளர்….
கைடி பொன்கலன்/அழகராசா…
.
இலங்கை, இந்திய ஆக்கிரமிப்பு காலத்திலிருந்து தமிழீழ விடுதலைக்கான பணிகளை ஆர்ப்பாட்டமின்றி செய்துகொண்டிருந்த உன்னத பணியாளன். உங்களின் இரத்தமும், வளர்ப்புமே எங்களின் உடலில் ஓடும் தேசப்பற்று.. மேதகு தலைவனையும், போராளிகளையும் சொந்தப்பிள்ளைகள் போல பார்த்துநின்ற உங்கள் உணர்விற்கு, அந்த மேதகுவின் பணிப்பில் கிடைத்த மதிப்பளிப்பே “நாட்டுப்பற்றாளர் நிலை”. வரலாற்றுத்தலைவனை எமக்கு வழிகாட்டியாக காட்டிநின்ற உங்களுக்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டவர்களே.. பெருமைப்படுகிறோம் அப்பா..
கைடி…….
1971/1972 களில் இலங்கையில் கொடிகட்டிப்பறந்த “ரெக்ஸ்” இசைக்குழுவின் ஸ்தாபகராகவும்,அக்காலப்பகுதியில் தலைசிறந்த எக்கோடியன் வாத்தியக் கலைஞனாகவும் பிரகாசித்து வந்த இவர் ,அந்நாட்களில் யாழ்ப்பாணம் வலிகாம பிரதேசத்திலும் பின்னர் வடமராட்சியிலும், அதன் பின் இடம்பெயர்ந்து வன்னி இரணைப்பாலை,புதுக்குடியிருப்பில் “ராஜாபோட்டோ” உரிமையாளராக, பிரபலமிக்க புகைப்படப்பிடிப்பாளராகவும் மக்களால் அதிகமாக அறியப்பட்டவர்.சிறந்த எழுத்தாளர், நடிகர், நாடகக் கலைஞன்.. புலிகளின் குரலின் நாடகங்களில் இவரது குரலும் ஒலித்து நின்றது. பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான “ஒரு சூடு ” குறும்படத்தின் கதாநாயகன்.
அப்பா, ராஜா அங்கிள், கைடி அண்ணை,என போராளிகளால் அதிகமாய் நேசிக்கப்பட்டவர். எமது தேசவிடுதலையையும், தலைவரையும், போராளிகளையும் அளவிற்கதிகமாக நேசித்துவந்தவர். போராட்டப் பாதையில் தன் பிள்ளைகள் அனைவரும் இணைந்தபோதும் சஞ்சலமின்றி தேசப்பணியை ஏற்று செயற்பட்டவர். கடற்புலி மாவீரர் லெப்.பரந்தாமன் இவரது சின்னமகன். தனது சின்னமகனின் பெயர்தாங்கிய போர்ப்படகு “பரந்தாமன்” கடலில் வெள்ளோட்டம் விடப்பட்டபோது கண்கலங்கி,பெருமிதமாய் கரையோரம் நின்ற நேரம் கண்ணைவிட்டகலாதது. கடற்புலி போராளி புலவர், போராளி பரந்தாமன், இவரது மகன்மாரே.. இவரது இசைப்பயணத்தின் தொடர்ச்சியே மகள் “தேசியப்பாடகி பிறின்சி… தேசப்பற்றுள்ள ஒருவரே தனது மகளுக்கு கணவனாக வேண்டுமென மனதிருத்தி தமிழீழ காவல்துறை அதிகாரியான அமரர் ரஞ்சித்குமார் அவர்களைத் தனது மருமகனாக தெரிவு செய்தவர்..

16 வருடங்கள் ஓடிவிட்டன “அப்பா”

நாட்டுப்பற்றாளர் ஞானமுத்து.கைடிபொன்கலன்/அழகராசா அவர்கள்
12/08/2006 அன்று, சுகயீனம் காரணமாக புதுக்குடியிருப்பு முல்லைத்தீவில் சாவடைந்தார்.

அப்பா…
உங்களின் தேசப்பற்று விவரிக்கமுடியாதது.. சுதந்திரமான தமிழீழத்தில், மேதகு மாமன்னனின் நல்லாட்சியில் வாழ்ந்து , அக்காலத்திலேயே இறந்து , நாட்டுப்பற்றாளராய் மதிப்பளிக்கப்பட்டு,
பிள்ளைகள்,போராளிகள் , காவல்துறையினரின் தோள்களில் வித்துடலாய் சுமக்கப்பட்டு, விதைக்கப்பட்டது நீங்கள் செய்த புண்ணியம். அப்பா,… நீங்கள் உயிராய் நேசித்த உங்களின் கனவு தமிழீழம் ..அத் தேசம் உருக்குலைந்து அழிக்கப்பட்டதை உங்களின் கண்களால் நீங்கள் பார்க்கவில்லை.. அந்தவகையில் நீங்கள் கொடுத்து வைத்தவரே! உறங்குங்கள் அப்பா.. உங்களின் சின்ன மகனுடனும், ஆசை மருமகனுடனும்…

நினைவுகளுடன்..

மகள்
தேசியப்பாடகி பிறின்சி ரஞ்சித்குமார்.

முந்தைய கட்டுரைதமிழ் மண்ணையும் தமிழ் மக்களையும் ஆழமாக நேசித்த நல்ல மனிதர்
அடுத்த கட்டுரைதமிழ்த் தேசிய உணர்வாளர் நெல்லைக்கண்ணன்

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்