இலங்கை குரங்கு சர்வதேச தலைப்பு செய்திகளில்  

இலங்கை குரங்கு சர்வதேச தலைப்பு செய்திகளில்    

இலங்கையில் நேற்று (9) ஒரு எதிர்பாராத குற்றவாளியான குரங்கு, நாடு தழுவிய மின்தடையை ஏற்படுத்தியதாகக் கூறப்பட்டு, முழு தேசத்தையும் இருளில் மூழ்கடித்தது.

இதையடுத்து அந்தக் குரங்கானது சர்வதேச தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்திருந்தது.

பாணந்துறை உப மின்நிலையத்தில் உள்ள மின் கட்டமைப்பில் காலை 11:30 (0600 GMT) மணியளவில் குரங்கு ஒன்று மோதியதன் காரணமாக நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டிருந்தது.

முதலில் தொழில்நுட்பக் கோளாறாகக் கருதப்பட்ட இந்தச் சம்பவம் உண்மையில் குரங்கினால் ஏற்பட்டது என்பதை எரிசக்தி அமைச்சர் உறுதிப்படுத்தினார்.

எவ்வாறெனினும் மின்சாரத்தை மீட்டெடுக்க அதிகாரிகள் கிட்டத்தட்ட 5 முதல் 6 மணி நேரம் உழைத்தனர்.

படிப்படியாக மின்சாரம் நேற்று மாலையாகும் போது வாமைக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில் மின் துண்டிப்பின் வினோதமான தன்மை உலகளாவிய கவனத்தை தூண்டியிருந்ததுடன், பல்வேறு நாடுகளின் பிரதான தலைப்புச் செய்திகளிலும் இடம்பிடித்திருந்தது.

அதேநேரம், நுரைச்சோலை அனல் மின் மின் உற்பத்தி நிலையத்தின் மூன்று மின் உற்பத்தி இயந்திரங்கள் செயலிழந்ததன் காரணமாக பல பகுதிகளில் நேற்றிரவு மீண்டும் மின் விநியோகம் தடைப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.