தமிழ் நாட்டில் சாதனை படைத்த புஷ்பா 2!

தமிழ் நாட்டில் சாதனை படைத்த புஷ்பா 2!

2021ஆம் ஆண்டில், சுகுமார் இயக்கத்தில் வெளியான படம், புஷ்பா : தி ரைஸ். இந்த படத்தில் அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்க, இவருக்கு ஜோடியாக ஸ்ரீவள்ளி கதாப்பாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். தற்போது, இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி இருக்கிறது. 

புஷ்பா 2: தி ரூல் திரைப்படம், டிசம்பர் 5ஆம் திகதி வெளியானது. பான்-இந்திய அளவில் ரிலீஸான இந்த படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பினை கொடுத்திருக்கின்றனர். 

புஷ்பா 2 படம், பாகுபலி-ஆர்ஆர்ஆர் ஆகிய படங்களின் ப்ரீ புக்கிங் சாதனையை முறியடித்திருக்கிறது. 

படம் வெளியாகி 2 நாட்கள் ஆகியிருக்கிறது. இதையடுத்து முதல் நாள் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் நேற்று வெளியானது. அதில், முதல் நாளிலேயே இப்படம், 294 கோடிக்கும் மேல் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. 

புஷ்பா 2 படம், கர்நாடகாவில் மட்டும் சுமார் 23 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. 

தமிழ்நாட்டில் மட்டும் புஷ்பா 2 படம், சுமார் 11 கோடி வசூலித்திருக்கிறதாம். 

முதல் நாள் வசூலில் தெலுங்கு திரைப்படம் ஒன்று தமிழ் நாட்டில் அதிகப்படியாக வசூலித்து சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.