நாளைய தினம் பூமியே இருளாகப் போகும் மிகப்பெரிய சூரிய கிரகணம்!
இந்த ஆண்டுக்கான (2024) முதலாவது சூரிய கிரகணம் நாளை (08) வட அமெரிக்கா முழுவதும் இடம்பெறவுள்ள நிலையில் இது ஒரு அரிதான சூரிய கிரகணமாக பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் சுமார் 7 நிமிடங்களுக்கும் அதிகமாக நீடிக்கும் இந்த சூரிய கிரகணத்தை போல் இன்னொரு சூரிய கிரகணம் இன்னும் 100 ஆண்டுகள் வரை பசிபிக் பகுதியில் மீண்டும் இடம்பெற வாய்ப்பில்லை என்பதனால் இது சிறப்பான சூரிய கிரகணமாக பார்க்கப்படுகிறது.
வட அமெரிக்கா முழுவதும், நிகழவுள்ள இந்தக் கிரகணமானது, மசாட்லான், டோரியன், மெக்சிகோ சென், அன்டோனியோ, ஒஸ்டின் மற்றும் டல்லாஸ், டெக்சாஸ், லிட்டில் ராக், ஒர்கன்சாஸ், இண்டியானாபோலிஸ், கிளீவ்லேண்ட், ஓஹியோ, ரோசெஸ்டர், நியூயோர்க், பெர்லிங்டன், வெர்மான்ட், மாண்ட்ரீல் மற்றும் கனடா ஆகிய பகுதிகளில் தென்படும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.
சூரிய கிரகணத்தின் போது, சந்திரனின் நிழலானது நியூயோர்க் மாநிலம் முழுவதும் மணிக்கு சராசரியாக 2,300 மைல் வேகத்தில் பயணிக்கும் என்றும் மாநிலத்தின் ஒரு பக்கத்திலிருந்து மறுபுறம் செல்வதற்கு சுமார் 10 நிமிடங்கள் மட்டுமே எடுக்கும் என்று ரோசெஸ்டர் மியூசியம் & அறிவியல் மையத்தின் கிரகண கூட்டாண்மை ஒருங்கிணைப்பாளர் டான் ஷ்னீடர்மான் கூறியுள்ளார்.
இந்நிலையில் இந்த கிரகணத்தில் இலங்கை நேரப்படி இரவு 11.37 மணிக்கு (அமெரிக்க நேரம் மதியம் 2:07 மணி), சந்திரன் சூரியனுக்கு முன்னால் நகரத் தொடங்கும், பின்னர் நள்ளிரவு 12.50 மணிக்கு (அமெரிக்க நேரம் பிற்பகல் 3:20 மணி) கிரகணம் ஆரம்பமாகி அதன் இறுதி 3 நிமிடங்கள் மற்றும் 38 வினாடிகளுக்கு அதிக இருள் நீடித்து (நீங்கள் நிற்கும் இடத்தைப் பொறுத்து சில வினாடிகள் கூடிக் குறைய வாய்ப்புண்டு) அதிகாலை 02.03 மணிக்கு (அமெரிக்க நேரம் மாலை 4:33 மணிக்குள்) சந்திரன் சூரியனைக் கடந்து ஒளி இயல்பு நிலைக்குத் திருப்பும் என்று கூறப்படுகிறது.
இந்த கிரகண நேரத்திலே சந்திரன் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சரியாக இருக்கும், சூரிய ஒளியை மறைத்து இருளாக்கும், இதன் போது சந்திரனின் நிழல் வட அமெரிக்கா முழுவதும் தென்மேற்கில் இருந்து வடகிழக்கு வரை இரண்டு மணிநேரம் வரை வெட்டிச்செல்லும், இந்த வேளையிலே இந்தப் பாதையில் உள்ள இடங்கள் இருளில் மூழ்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சூரிய கிரகணத்தின் போது சந்திரன் பூமியில் இருந்து சுமார் 223,000 மைல்கள் தொலைவில் காணப்படும், இவ்வாறு சந்திரன் பூமிக்கு அருகாமையில் காணப்படுவதன் காரணத்தால் சந்திரன் வானில் சற்று பெரியதாக தோன்றும், இதன் விளைவாக சூரிய கிரகணத்தின் இருள் நீண்ட காலத்திற்கு இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
மேலும், பூமியும் சந்திரனும் நாளை சூரியனிலிருந்து 93 மில்லியன் மைல் தொலைவில் இருக்கும், ஒரு நெருக்கமான சந்திரன் அதிக தொலைதூர சூரியனுடன் இணைந்தால், ஆகக்குறைந்தது 7 நிமிடங்கள் வரை கிரகணம் நீடிக்கும்.
இதற்கு முன்னர், 1973 ஆம் ஆண்டு ஆபிரிக்காவில் ஏழு நிமிடங்களுக்கு மேல் நீடித்த கிரகணத்தை உலகம் கண்டது இதற்கு பின்னர் பசுபிக் பகுதியில் 2150 ஆண்டு வரை இவ்வாறு ஒரு கிரகணம் மீண்டும் நடக்காது என்று கூறப்படுகின்றது.
எனவே, இந்த அரிய சூரிய கிரகணத்தை பார்க்க தவறவிட வேண்டாம் என்றும் உரிய பாதுகாப்பு முறைகளை கடைப்பிடித்து சூரிய கிரகணத்தை பார்வையிடுமாறும் அனைவரைக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.