அமெரிக்காவில் சூறாவளி - 27 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் சூறாவளி - 27 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் ஏற்பட்ட சூறாவளியால்  27 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவின் மத்திய பகுதியில் திடீரென சூறாவளி ஏற்பட்டதையடுத்து கென்டக்கி, மிசோரி மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

சூறாவளி தாக்கியதில் மிசோரி மாகாணத்தின்  செயின்ட் லூயிஸ் நகரில் மட்டும் 5,000 கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.

தற்போது கென்டக்கி, மிசோரியில் மீட்புப் பணி தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.இதேவேளை  பாதிக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.