கார் பந்தயத்தில் அஜித்குமார் செலுத்திய காரின் டயர் வெடித்ததால் பரபரப்பு!

ஜி.டி 4 ஐரோப்பிய கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் ஓட்டிச்சென்ற காரின் டயர் வெடித்ததால் பரபரப்பு நிலவியது.
நெதர்லாந்தில் ஜி.டி 4 ஐரோப்பிய கார் பந்தயம் மே 17-ஆம் திகதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் நடிகர் அஜித்குமார் போர்ஷியா அணி சார்பில் பங்கேற்றார்.
இந்தப் போட்டியின் இரண்டாவது சுற்று இன்று தொடங்கியது.
இந்த நிலையில் அஜித்குமார் ஓட்டிச்சென்ற காரின் டயர் திடீரென வெடித்தது.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த அவரது கார் விபத்தில் சிக்கியதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த விபத்தில் நடிகர் அஜித்குமாருக்கு எந்த பாதிப்பும் இல்லை என தகவல் தெரியவந்துள்ளது.
கார் ட்ராக் சர்க்யூட்டில் நின்ற பிறகு, டயர் மாற்றப்பட்டு மீண்டும் பந்தயத்தில் அஜித் பங்கேற்றார்.