5 வயதில் சோழன் உலக சாதனை - 150 பொது அறிவுக் கேள்விகளுக்கு குறைந்த நேரத்தில் பதில்!

5 வயதில் சோழன் உலக சாதனை - 150 பொது அறிவுக் கேள்விகளுக்கு குறைந்த நேரத்தில் பதில்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் வசித்து வரும் பாஸ்கரன் மற்றும் விஜினி ஆகியோரின் 5 வயது மகனான சாஸ்வின், 150 பொது அறிவுக் கேள்விகளுக்கு 4 நிமிடங்கள் மற்றும் 15 நொடிகளில் சரியாக விடையளித்தார். 

இதனை கண்காணித்த சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் துணைச் செயலாளர் கதிரவன் த.இன்பராசா மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் பொதுத் தலைவர் சிவ வரதகரன் போன்றோர் சோழன் உலக சாதனை படைத்த சிறுவன் சாஸ்வினுக்கு சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், தங்கப்பதக்கம், அடையாள அட்டை, நினைவுக் கேடயம் மற்றும் பைல் போன்றவற்றை வழங்கிப் பாராட்டினார்கள்.

இதற்தான நிகழ்வை சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனமும் பீபல்ஸ் ஹெல்பிங் பீபில்ஸ் பவுண்டேஷன் போன்ற அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த அதேவேளை மட்டக்களப்பு கதிரவன் அமைப்பு ஒருங்கிணைத்து நடத்தியிருந்தது.

சமூக சேவைகள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் சிவராசா  இந் நிகழ்விற்கு தலைமையேற்றிருந்தார்.

சிறப்பு விருந்தினர்களாக புதிய சந்தர்ப்பங்கள் அமைப்பின் பணிப்பாளரும் பள்ளித் தலைமை ஆசிரியருமான சா.சுதாகரன்,  கதிரவன் சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் ஆலோசகர் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியருமான குலேந்திரராசா போன்றோர் பங்கு கொண்டனர். 

கௌரவ விருந்தினராக மட்டு புனித மிக்கேல் கல்லூரியின் தொடக்கப் பிரிவின் துணைத் தலைமை ஆசிரியர் எஸ்.எஸ்.றெனோன் டெசி ஸ்பெக், மட்டு சென்மேரிஸ் பன்னாட்டுப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜினி பிரான்சிஸ், மின்னல் ஊடகப் பணிப்பாளர் மற்றும் கனடாவைச் சேர்ந்த சமூகச் சேவையாளர் உதயராஜ் போன்றோர் சோழன் உலக சாதனை படைத்த சிறுவனை வாழ்த்திப் பாராட்டினார்கள்

கதிரவன் அமைப்பின் துணைத் தலைவர் சோலையூரான் தனுஸ்கரன் நிகழ்வை தொகுத்து வழங்கினார். கதிரவன் அமைப்பின் ஆலோசகர் அன்பழகன் குரூஸ் வரவேற்புரையாற்றிய அதேவேளை அபிவிருத்தி அலுவலர் ஜெகதீஸ்வரன் நன்றியுரையாற்றினார். 

சோழன் உலக சாதனை படைத்த சிறுவன் சாஸ்வினை அங்கு வந்திருந்த அனைவரும் வாழ்த்திப் பாராட்டினார்கள்.