Status பிரியர்களுக்கு WhatsApp இன் மகிழ்ச்சித்தகவல்...
அவ்வப்போது வாட்சப் (WhatsApp) அதன் பயனாளர்களுக்கு புதுப்புது அப்டேட்டுகளை கொண்டு வரும். அந்த வகையில் தற்போது ஸ்டேட்டஸ் (Status) பிரியர்களுக்கு சூப்பர் அப்டேட் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளது.
அதாவது இனி வாட்சப்பில் இசையுடன் சேர்ந்த ஸ்டேட்டஸ் அப்டேட் செய்ய முடியும்.
இதனை எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும் என்றால், வாட்சப் ஸ்டேட்டஸ் பக்கத்துக்கு சென்று, ட்ரொயிங் எடிட்டர் எனும் ஒப்ஷனுக்குச் சென்று கீழ் பக்கமாக இருக்கும் மியூசிக் எனும் பட்டனை அழுத்த வேண்டும்.
பின் அதில் காண்பிக்கப்படும் மெனுவில் உங்களுக்கு பிடித்த பாடல்கள் அல்லது இசை கலைஞர்களின் இசையை தேடி தெரிவு செய்துகொள்ள முடியும்.
அதில் நீங்கள் விரும்பும் குறிப்பிட்ட பகுதியை மட்டும் 15 நொடிகள் வரையில் ஸ்டேட்டஸ் வைக்க முடியும்.
அதேபோல் புகைப்படங்களுக்கு பதிலாக காணொளிகளை ஸ்டேட்டஸாக வைத்து அதனுடன் மேற்கூறிய வகையில் இசையை சேர்க்கும்பொழுது காணொளி எவ்வளவு நேரத்துக்கு ப்ளே ஆகுமோ அதே அளவுக்கு இசையும் ப்ளே ஆகும்.
உங்கள் ஸ்டேட்டஸை பார்ப்பவர்கள் நீங்கள் சேர்த்துள்ள பாடலின் பெயரை க்ளிக் செய்து பாடல், மற்றும் இசைக்கலைஞர்கள் தொடர்பான விபரங்களை தெரிவு செய்து கொள்ள முடியும்.
தற்போது சோதனை முறையில் இருக்கும் இந்த அப்டேட் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது.