20 கோடி பார்வைகளைக் தனதாக்கிக் கொண்ட தாராள பிரபு பாடல்!

நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்த தாராள பிரபு படத்தின் பாடல் 20 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.

இயக்குநர் கிருஷ்ணா மாரிமுத்து இயக்கத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான தாராள பிரபு திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் கதை ரீதியாகவும் பாடல்களாலும் கவனம் பெற்றது.

முக்கியமாக, இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்த, ‘பாக்கு வெத்தலை மாத்தி முடிச்சு’ பாடல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. உலகளவில் கேட்கப்பட்ட இந்தப் பாடலை அதிக முறை ரீல்ஸ் வீடியோவாகவும் மாற்றினர்.

திருமண நிகழ்வுகளில் இப்பாடல் கட்டாயம் இடம்பெற்றுவிடும் என்கிற அளவிற்கு கேட்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இப்பாடல் யூடியூபில் இதுவரை 20 கோடி (200 மில்லியன்) பார்வைகளைக் கடந்து அசத்தியுள்ளது. 

20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காமெண்ட்களும் இருப்பதால் அனிருத் கொடுத்த ஹிட் பாடல்களில் முக்கியமான இடத்தை இப்பாடலும் பெற்றுள்ளது.