ஒரு கிலோ எலுமிச்சை பழத்தின் விலை 3000 ரூபாயாக உயர்வு!

தம்புள்ளை உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று (15) 01 கிலோ கிராம் எலுமிச்சை பழத்தின் விலை 3000 ரூபாயாக அதிகரித்து காணப்பட்டுள்ளது.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு ஊவா மாகாணத்தில் இருந்து எலுமிச்சைபழம் விநியோகிக்கப்படுகின்றது.
சந்தைக்கு போதியளவு எலுமிச்சை பழம் கிடைக்காத காரணத்தினால் எலுமிச்சையின் மொத்த மற்றும் சில்லறை விலைகள் அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.