இலங்கை சந்தைகளில் கரட்டின் விலை திடீர் வீழ்ச்சி
அண்மைய நாட்களில் 2,000 ரூபாவுக்கும் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்ட கரட் ஒரு கிலோகிராம் தற்போது சந்தையில் 700 ரூபாய் முதல் 800 ரூபாவுக்கு இடைப்பட்ட விலைகளில் விற்பனை செய்யப்படுவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
அதற்கமைய, பேலியகொடை மெனிங் சந்தையில் கரட் ஒரு கிலோகிராம் ஒன்றின் சில்லறை விலை இன்றைய தினம் 750 ரூபாய் முதல் 850 ரூபாய் வரையில் பதிவாகியிருந்தது.
அத்துடன், போஞ்சி ஒரு கிலோகிராம், 650 ரூபாவுக்கும், கோவா கிலோகிராம் ஒன்று 500 ரூபாவுக்கும் லீக்ஸ் ஒரு கிலோகிராம் 350 ரூபாவுக்கும் சில்லறை விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
ஒரு கிலோகிராம் தக்காளியின் சில்லறை விலை 450 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் கறிமிளகாய் 850 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் வெண்டைக்காய் 350 ரூபா முதல் 450 ரூபாவுக்கும் இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்பட்டுள்ளது.
கொழும்பு மெனிங் சந்தை, கெப்பட்டிபொல விசேட பொருளாதார நிலையம், புறக்கோட்டை பொருளாதார மத்திய நிலையம், தம்புள்ளை, நாரஹேன்பிட்டி, நுவரெலியா, உள்ளிட்ட பொருளாதார மத்திய நிலையங்களிலும் மரக்கறிகளின் விலை இன்றைய தினம் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.