இலங்கை சந்தைகளில் தக்காளியின் விலை அதிகரிப்பு!

நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் தக்காளியின் விலை இன்று அதிகரிப்பை பதிவுசெய்துள்ளது.
இந்தநிலையில் ஒரு கிலோகிராம் தக்காளியின் விலை 800 ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சில மாதங்களாக பெய்த கனமழை காரணமாக நுவரெலியாவில் பயிரிடப்பட்ட தக்காளி செய்கை சேதமைடைந்ததன் காரணமாக இவ்வாறு தக்காளியின் விலை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.