முட்டைகளின் விலைகள் அதிகரிப்பு - மரக்கறிகளின் விலைகள் வீழ்ச்சி!
யாழ்ப்பாணத்தில் அறுவடை செய்யப்பட்ட மரக்கறிகள் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து, உயர்வடைந்திருந்த மரக்கறி வகைகளின் விலை 65 முதல் 70 வீதம் வரை குறைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியில் விளைவிக்கப்பட்ட கரட், கறிமிளகாய், உருளைகிழங்கு போன்ற மரக்கறிகள் அதிகளவில் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்துக்கு கொண்டுவரப்பபட்டுள்ளன.
அதற்கமைய, மொத்த விலையில் 1,000 முதல் 2,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கரட் இன்று காலை 500 முதல் 600 ரூபாய் வரை குறைந்துள்ளது.
அதேவேளை, இன்று முதல் மீண்டும் முட்டை விலையை அதிகரிக்க அகில இலங்கை முட்டை வர்த்தகர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, ஒரு முட்டையின் மொத்த விலை 58 ரூபாவாகவும், சில்லறை விற்பனை விலை 63 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.