நத்தார் பண்டிகைக்கு அடுத்த நாள் காற்று சுழற்சி உருவெடுக்கும் - வானிலை ஆய்வாளர் எச்சரிக்கை!
இலங்கையின் தெற்கு அந்தமான் கடல் பிராந்தியத்தில் காணப்படுகின்ற காற்று சுழற்சி, மேற்கு நோக்கி இலங்கையின் தெற்கு பகுதியினூடாக நகர்ந்து வருவதனால் இன்று முதல் நாட்டின் சில பகுதிகளுக்கு மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக மூத்த வானிலை ஆய்வாளர் சூரியகுமார் தெரிவித்துள்ளார்.
இந்த காற்று சுழற்சியானது எதிர்வரும் 14ஆம் திகதி இலங்கைக்கு தெற்காக வந்து, குமரிக் கடல் வழியாக மாலைத்தீவு, இந்தியாவின் லட்சஷதீவுக்கு இடைப்பட்ட பகுதியின் ஊடாக அராபிய கடல் பிராந்தியத்திற்கு செல்லும்.
அதேவேளை எதிர்வரும் 18, 19ஆம் திகதிகளில் மீண்டும் ஒரு காற்று சுழற்சி இலங்கையை நெருங்கி, அது எதிர்வரும் 21, 22, 23ஆம் திகதியளவில் மன்னார் வளைகுடா ஊடாக அரபிக் கடல் பிராந்தியத்தினுள் நகரும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன் காரணமாகவும் இலங்கையின் கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் மழை காணப்படும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாது, எதிர்வரும் நத்தார் பண்டிகைக்கு அடுத்த நாள் அந்தமான் கடல் பிராந்தியத்தில் தெற்கு சுமத்திரா தீவை ஒட்டி மேலும் ஒரு காற்று சுழற்சி வங்க கடல் பிராந்தியத்தில் உருவாகும்.
அது படிப்படியாக வலுவடைந்து எதிர்வரும் 26, 27ஆம் திகதியளவில் இலங்கையை நெருங்கி, தமிழ்நாட்டை நோக்கி செல்லும்.
எனவே மேற் கூறப்பட்டகுறித்த காலப்பகுதிகளில் இலங்கையில் மழை பெய்யும் சாத்தியம் காணப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது,
இந்த நிலையில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- சினிமா : மௌனராகம் புகழ் “மிஸ்டர் சந்திரமௌலி..’ காலமானார்!
- கைது செய்யப்பட்ட 25 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில் - பருத்தித்துறை...
- வெச்சான் பாரு Vodafone.. வெறும் ரூ.179 போதும்.. அன்லிமிடெட் வாய்ஸ்.. ஓடிடி சப்ஸ்கிரிப்ஷன்.. 2 ஜிபி டேட்டா!
- சமூக வலைத்தளங்களில் பதிவிடுவோர் அவதானமாக இருக்கவும் - நாளை நீங்களும் சிக்கலாம்!
- VAT வரியால் லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு!
- சிங்களம் என்ற இனமே இருக்கவில்லை! - தமிழ் பெளத்தம் மறைக்கப்பட்டது ஏன்? விஜயன் வருகை கற்பனை கதையா?
- ரணிலின் பாதீட்டை வெற்றிபெற வைத்த தமிழ் கட்சிகள்!