அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம்!
நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று வீழ்ச்சி அடைந்துள்ளது .
இலங்கை மத்திய வங்கி இன்று(28) வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி, 305 ரூபாய் 56 சதமாக பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 306 ரூபாய் 06 சதமாக காணப்பட்டது.
அத்துடன், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 315 ரூபாய் 29 சதமாக பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 315 ரூபாய் 72 சதமாக காணப்பட்டது.