திலீபனின் நினைவூர்தி பேரணியை தாக்கியவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!
தியாக தீபம் திலீபனின் நினைவூர்தி பேரணி மீது திருகோணமலை, சர்தாபுர பகுதியில் வைத்து தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைதான 6 பேரும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தியாக தீபம் திலீபனின் நினைவூர்தி பேரணி மீது திருகோணமலை, சர்தாபுர பகுதியில் வைத்து தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைதான 6 பேரும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த ஆறு பேரும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீது தாக்குதல் நடத்தி வாகனங்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் கைதாகியிருந்தனர்.
குறித்த வழக்கு திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தினால் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, அவர்களை பிணையில் செல்ல நீதவான் அனுமதி வழங்கினார்.
அத்துடன் குறித்த வழக்கை, ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க முடியாது என இரண்டாவது தடவையாகவும் யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
தியாக தீபம் திலீபன் நினைவேந்தலை தடைசெய்ய வேண்டுமென யாழ்ப்பாணம் பொலிஸாரால் கடந்த 19ஆம் திகதி மனுத்தாக்கல் செய்யப்பட்டு அது நீதிமன்றினால் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்தநிலையில், பொலிஸ் திணைக்களத்தின் சட்டம், ஒழுங்கு பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டமா அதிபர் திணைக்கள பிரதிநிதிகள் உள்ளடங்கிய குழுவொன்று, இன்று மீண்டும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தது.
எனினும் அதனை ஆராய்ந்த நீதிமன்றம் குறித்த மனுவையும் தள்ளுபடி செய்துள்ளது.
_____________________________________________