பிரபல சிங்கள நடிகை மாலினி பொன்சேகா காலமானார்!

இலங்கை சினிமாவின் ராணி என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற நடிகை மாலினி பொன்சேகா இன்று (24) காலை காலமானார்.
அவர் கொழும்பில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (24) உயிழந்துள்ளார்.
ஏழு தசாப்தங்களாக நடித்து வந்த மூத்த நடிகையான இவர், 1968 இல் திஸ்ஸ லியன்சூரியவின் “புஞ்சி பபா” என்ற திரைப்படத்துடன் இலங்கைத் திரைப்படத்துறையில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.
தொடர்ந்து பல்வேறு விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளதுடன் ஏப்ரல் 2010 இல், மாலினி பொன்சேகா ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றத்திற்கும் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.