பெரும் எதிர்பார்ப்புக்களுடன் சல்லியர்கள் திரைப்படம் பிரான்சில் திரையிடப்படுகிறது
"சல்லியர்கள்" திரைப்படம் பிரான்சில் திரையிடப்படுகிறது. 08 12 2024 ஞாயிறு மாலை 18.00 மணிக்கு தமிழீழத் தேசிய உணர்வாளர் நடிகர் கருணாஸ் அவர்களின் உருவாக்கத்தில் மேதகு 1 நடிகர் கரிகாலன் தி. கிட்டு இயக்கத்தில் வெளிவந்திருக்கும் எங்களின் கதை இது. அனைவரும் திரையரங்கில் வந்து பார்த்து இவ்வாறான ஆக்கங்களை ஊக்கப்படுத்துங்கள். எமது கதைகளை எமது சந்ததிக்கு கடத்துங்கள். நடிகர் கருணாஸ் அவர்கள் உலக அரங்குகளில் ஈழத்தமிழினத்தின் அவலங்களை எடுத்துக் கூறி இனவழிப்புக்கான நீதி கோரல் விடயங்களில் முன்னின்று உழைக்கும் ஒருவர். அவருக்கு ஆதரவளிப்போம். வாரீர். கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் வாிகளில் இப்படம் உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. கீழுள்ள சதுரக் குறியீட்டை கைத்தொலைபேசிகளில் வாசிப்பதனுாடாக உங்கள் நுழைவுச் சிட்டைகளைப் பெற்றுக்கொள்ளலாம். திரையரங்கிலும் நேரடியாகப் பெற்றுக்கொள்ள முடியும்.