முள்ளிவாய்க்காலில் தமிழ்ர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை மறக்கப்போவதில்லை - உமா குமரன்

முள்ளிவாய்க்காலில் தமிழ் சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை ஒருபோதும் மறக்கப்போவதில்லை என புத்தாண்டு வாழ்த்து செய்தியில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் தெரிவித்துள்ளார்.
நாங்கள் தமிழ் புதுவருடத்தினை கொண்டாடும் இந்த தருணத்தில் பிரித்தானியாவிலும் உலகெங்கிலும் உள்ள தமிழர்களிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன் –
தமிழ் பாரம்பரியத்தின் முதலாவது பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில்,
தமிழ் புத்தாண்டு தனிப்பட்ட அர்த்தத்தை கொண்டுள்ளது.
எங்களது சமூகம் ஒரு பெருமை மிக்க சமூகம்,
நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் எனது முதல் நடவடிக்கைகளில் ஒன்றாக,
இலங்கையில் போர்குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக தடைகளை விதிக்கவேண்டும் என நான் அழைப்பு விடுத்தேன்.
அன்றிலிருந்து இந்த விடயம் தொடர்பில் செயற்படுவதை நான் நிறுத்தவில்லை.
கடந்த 15 வருடங்களிற்கு பின்னர்
தொழில்கட்சி இது குறித்து நடவடிக்கை எடுத்துள்ளது
இதனால் நான் பெருமிதம் அடைகின்றேன்.
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் போது இழைக்கப்பட்ட அட்டுழியங்களிற்கு காரணமான
இலங்கை இராணுவத்தின் சிரேஸ்ட அதிகாரிகளிற்கு எதிராக மார்ச் மாதம் பிரிட்டிஸ் அரசாங்கம் தடைகளை விதித்தது.
இது நீதிக்கான நீண்டகாலமாக காத்திருந்த பல குடும்பங்களிற்கு மிக முக்கியமானதொரு தருணம்.
ஆனால் நீதி என்பது ஒரு முறை மாத்திரம் நடக்கும் நிகழ்வல்ல,
நாம் தொடர்ந்து செயற்படவேண்டும்
ஐநாவின் மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரைக்கு ஏற்ப இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும் என நான் அழைப்பு விடுத்துள்ளேன்.
மே 2009 கொடுரங்களை நாங்கள் நினைவில் கொள்கின்றோம்
நாங்கள் ஒருபோதும் மறக்கமாட்டோம்
நாங்கள் தொடர்ந்தும் பதில்களை தேடுவதை நிறுத்தக்கூடாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் தெரிவித்துள்ளார்.