நடிகர் மோகன்லால் இலங்கைக்கு விஜயம்!

பிரபல மலையாள நடிகர்களான மோகன்லால் மற்றும் குஞ்சாக்கோ பாபன் திரைப்பட படப்பிடிப்பொன்றுக்காக இன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
பேட்ரியோட் ( Patriot) என்ற படத்தின் 3 நாட்கள் படபிடிப்பிற்காக குறித்த நடிகர்கள் உள்ளிட்ட படக்குழுவினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியாவில் 08 மொழிகளில் (Pan India) இந்த படம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவின் கொச்சி நகரில் இருந்து இன்று முற்பகல் 11.20 அளவில் சிறிலங்கள் விமான சேவைக்கு சொந்தமான UL-166 விமானம் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை அவர்கள் வந்தடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.