தோழர் போஸ்கோ இவரைப் பற்றி நீங்கள் அவசியம் அறிந்துகொள்ள வேண்டும்

மே பதினேழு இயக்கம் திருமுருகன் காந்தி

தோழர் போஸ்கோ  இவரைப் பற்றி நீங்கள் அவசியம் அறிந்துகொள்ள வேண்டும்

 பிரான்சிலிருந்து ஈ.ழத்திற்கான நீதிக்காக ஐ.நா மனித உரிமை அவைக்குள் போராடும் தோழன். ஐ.நா மனித உரிமை அவைக்குள் தமிழர்களின் கருத்துகள் 2009ம் ஆண்டுவரை சென்று சேர்வதில் இருந்த தடையை உடைத்தவர். ஐ.நாவின் யுனெஸ்கோ பிரிவில் நீண்டகாலம் பணி செய்தவர். ஐ.நா அவையின் விதிமுறைகள் நன்கு அறிந்ததால், அதனூடாக தமிழர்கள் ஐ.நா மனித உரிமை அவையின் தலைமை செயலகமான ஜெனிவாவிற்குள் செல்வதற்கான வழியை கண்டடைந்து செயலாற்றியவர். புலம்பெயர் தமிழர்கள், ஈ.ழத்தமிழர்கள், தமிழக தமிழர்கள் என பல அரசியல் ஆளுமைகளை ஐ.நா மனித உரிமை அவையில் பேச வைத்தவர். மனித உரிமை அவைக்குள் சாமானியர் செல்ல இயலாத நிலை இருந்ததை மாற்றியவர். பெரும் பொருட்செலவில் மட்டுமே இதற்குரிய அனுமதியை பெறுவது, அல்லது சிறப்பான தொடர்புகள் மூலமாக நுழைவு அனுமது பெறுவது என்கிற நிலையை மாற்றி, பலரது குரல்களை ஐ.நாவின் மைய அரங்கில் ஒலிக்க வைத்த திழர். இனிமையானவர், பண்பானவர். 

2015ல் இவரைச் சந்தித்தேன். அச்சமயத்தில் ஐ.நா மனித உரிமை அவையில் 'அமெரிக்க தீர்மானம்' முன்வைக்கப்பட்டது. இந்த தீர்மானம் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை நிராகரித்தது. தமிழர்கள் மீதும் விசாரணை வேண்டுமென்றது. இலங்கை அரசே விசாரிக்கலாம் எனச் சொன்னது. இந்தத் தீர்மானத்தை மே17 இயக்கம் எதிர்த்தது. ஆனால் அன்று ஒருசில புலம்பெயர் அமைப்புகள் பிரிட்டன், அமெரிக்க அரசுடன் தமக்கு இருந்த நெருங்கிய உறவால் இந்தத் தீர்மானத்தை ஆதரித்தனர். அச்சமயத்தில் ஐ.நா மனித உரிமை அவை தலைவரின் நிர்வாகக் குழுவின் தனித்த கூட்டத்தில் இந்தத் தீர்மானத்தின் 'ஹைப்ரிட் மெக்கானிசம்' என்பது தமிழர்களை வஞ்சிக்கும், கிழக்கு திமோர், கம்போடியா ஆகியவற்றின் மாதிரிதோடு ஒப்பிடக்கூடாது என்று நான் வாதம் செய்தேன். இந்த நாடுகளின் பாதிக்கப்பட்ட மக்களின் சுயநிர்ணய உரிமையை ஐ.நா உறுதி செய்த பின்னரே ஹைப்ரிட் விசாரணைக் கமிசன் அமைக்கப்பட்டதை எடுத்துச் சொன்னேன். பாதிக்கப்பட்ட சமூகத்தினர் மட்டும் கருத்துகளை தெரிவியுங்கள் என எனது கருத்தை முடக்கினர். சுயநிர்ணய உரிமையோடுதான் சர்வதேச விசாரணைகளை அமைக்க இயலுமென தெற்கு சூடான், போஸ்னியா வழக்குகளை நான் சுட்டிக்காட்டியதை நிராகரித்து, தமிழருக்கு எதிரான தீர்மானம் முன்னெடுக்கப்பட்டது. இச்சமயத்தில் அமெரிக்க-இங்கிலாந்து-இந்தியா-இலங்கை கூட்டமைவின் நிகழ்ச்சி நிரலை ஏற்றவர்களே ஐ.நா மனித உரிமை அவைக்குள் செல்ல இயன்றது. பிரிட்டன், இங்கிலாந்து, அமெரிக்க அரசுடன் நெருக்கமாக இருந்த அமைப்புகள் மட்டுமே ஐ.நா ஜெனிவா அவையில் நான் கண்டேன். 

இந்த நெருக்கடியான சமயத்தில் புலம்பெயர் அமைப்பின் பிரதிநிதிகள் என வந்தவர்களில் ஓரிருவரைத் தவிர மற்றவர்கள் தமிழர் சுயநிர்ணய உரிமையை முன்வைத்து பேச மறுத்தனர். இரு ஆண்டுக்கு முன் நான் இங்கிலாந்து சென்ற சமயத்தில் வரவேற்றவர்கள் கூட முகம் திருப்பிச் சென்றனர்.

 இது எனக்கு புது அனுபவமாக,குழப்பமாக இருந்தது. மேலும் இ.னப்.படு.கொ..லை எனும் வார்த்தையை தவிர்த்துப் பேசச் சொன்னார்கள். 

இந்த சமயத்திலேயே நான் தோழர் போஸ்கோவை சந்தித்தேன். இ.னப்ப.டுகொ..லைக்கான விசாரணை, சுயநிர்ணய உரிமை ஆகியவற்றை விட்டுக்கொடுக்காமல் பேச அனுமதித்தால் நான் ஐ.நா மனித உரிமை அவையில் பேசுகிறேன் இல்லையெனில் எங்களால் பங்கேற்க இயலாதென்ற போது, புன்முறுவலோடு ஏற்பாடு செய்யலாம் என்றார். இந்த G-word (g.eno.ci..de) வார்த்தையை பயன்படுத்தினால் தகுதி நீக்கம் செய்துவிடுகிறார்கள் என்று சில தோழர்கள் தெரிவித்தார்கள். 

ஆனால் இத்தடைகளை மீறி தமிழரின் சுயநிர்ணய கோரிக்கை, சர்வதேச விசாரணை, இன..படு.கொ.லை ஆகிய வார்த்தைகளை ஒவ்வொரு அமர்விலும் பதிவு செய்தோம். ஐ.நா மைய அமர்வில் ஓரிருவர் பேசுவதே பெரும் செய்தியாக வெளிவந்த சமயத்தில், கிட்டதட்ட 20 பேர்களை பேச வைத்தார் தோழர் பாஸ்கோ. இதுமட்டுமல்லாமல், ஐ.நாவின் அவைக்குள்ளாக சிறப்பு கூட்டங்கள் நடக்கும், இந்த கூட்டங்களுக்கான அரங்குகள் மிகுந்த பொருட்செலவு தருபவை. வசதிமிகுந்த அமைப்புகள், international NGO ஆகியவை மட்டுமே நடத்துவார்கள். இந்த நிகையை மாற்றி 10க்கும் மேற்பட்ட சிறப்புக் கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்தார். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், முன்னாள் களப்போராளிகள், தமிழ்நாட்டின் பலவேறு மனித உரிமை செயற்பாட்டாளர்கள் என பலரை பட்டியலிட்டு பேசவைத்தார். இவ்வகையில் நான் தோழர்கள் சிவாஜிலிங்கம், கஜேந்திரக்குமார் பொன்னம்பலம், அனந்திசசிதரன் ஆகியோரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. 

இச்சமயத்தில் வெனிசுவேலா நாட்டின் டிசிய்சா Alfred de Zayas

 எனும் சுயாதீன ஆலோசகர், மக்களின் சுயநிர்ணய உரிமையை அடிப்படை மனித உரிமை சட்டகத்திற்குள் மீண்டும் கொண்டு வரவேண்டுமென பேசியதை ஒரு அரங்கில் கேட்டேன். அவர் ஐ.நாவின் தலைவருக்கான ஆலோசகராக இருந்தார். அவரைச் சந்தித்து தமிழர்களின் சுயநிர்ணய உரிமை குறித்து பேச இயலுமா என்ற போது, அவர் கூட்டாட்சிதான் இலங்கைக்கானது என்றார். லத்தின் அமெரிக்க நாடுகளின் சூழலுக்கேற்ற தீர்வுகள் தெற்காசியாவிற்கு பொருந்தாது என்றேன். தொடர்ந்து விவாதிப்போம் என்றார். நான் தோழர் போஸ்கோவிடம் இதுகுறித்து தெரிவித்து, நாம் அவரை எப்படியாவது நமது அமர்விற்கு அழைத்து பேச வைப்போம். நமது சிக்கல்களை தெரியவைத்தால் அவரது கருத்துகள் மாறும். இது நமக்கு பயன்படும் என்றேன். அடுத்த ஐ.நா அமர்வுக்காக ஒருவருடம் கழித்து சென்றபோது எங்களது அமர்வில் டிசோய்சா (Alfred de Zayas) 

 அமர்ந்திருந்தார். போஸ்கோ பேசி சம்மதிக்க வைத்திருந்தார். தென்னாப்பிரிக்க செயற்பாட்டாளர், நான், போஸ்கோ ஆகியோர் தொடர்ந்து உரையாடி, தமிழர் சுயநிர்ணய உரிமையை விளக்கி ஏற்க வைத்தோம். 2017ல் இருந்து இன்றுவரை அவர் ஈ.ழ மக்களின் விடுதலை ஆதரித்து பேசி வருகிறார். 

இதன் பின்னர், ஐ.நா மனித உரிமை அவையில் பங்கேற்கும் பிற நாட்டின் செயல்பாட்டாளர்களை இணைக்கலாம் என்றேன். இவர்கள் அனைவரையும் இணைத்து செயல்பட்டால் இன்னும் வலிமையாக நம் கருத்துகளை கொண்டு செல்லலாம் என முடிவெடுத்தோம். அதன்படி வெஸ்டர்ன் சஹாரா, குவைத், பாலஸ்தீனம், ஆப்கானிஸ்தான், ஹவாய், குர்திஸ்தான், காசுமீர், உள்ளிட்ட மனித உரிமை செயற்பாட்டாளர்கள் எங்கள் அமர்வில் தொடர்ந்து பங்கெடுக்க ஆரம்பித்தார்கள்.

 தோழர் போஸ்கோ போன்ற செயல்பாட்டாளர்களை ஐ.நா மனித உரிமை அவையில் இயங்க விடாமல் சில ஐ.நா அதிகாரிகள் தொடர்ந்து இடையூறு தருவார்கள். நமது அறிக்கையை வாசிக்க கொடுக்கப்பட்ட வாய்ப்பை இறுதிநேரத்தில் மறுப்பார்கள், அனுமதி கடிதம் ஏற்க மறுப்பார்கள், அனுமதி சீட்டு தரமறுப்பார்கள். இவற்றையெல்லாம் கடந்து போஸ்கோ வலுவான தமிழர் பிரதிநிதித்துவத்தை உருவாக்கினார். மேற்குலக சார்பு ஐ.நா அதிகாரிகள் எங்களை முடக்க பல்வேறு முயற்சிகள் எடுத்ததை முறியடிக்க ஐ.நா மனித உரிமை செயல்பாட்டாளர்கள் கூட்டமைப்பை 2017ல் உருவாக்கினோம். பலவேறு குழுக்களாக பிரிந்திருந்த தமிழர் குழுக்களை சார்ந்தவர்களை சந்தித்து ஒன்றாக இயங்க கூட்டமைவையும் 2017ல் ஏற்படுத்தினோம். இந்த முயற்சிகள் 2018ல் உடைக்கப்பட்டது. சிலர் இந்த கூட்டமைப்பை சிதைத்தனர்.

 2017ல் ஐரோப்பிய பாராளுமன்றம் செல்வதற்கான அனுமதியை போஸ்கோ எற்றுக்கொடுத்தார். புருஸ்ஸெல்ஸ் நகரில் ஐரோப்பிய பாராளுமன்றத்திற்குள்ளாக விவாதிக்கும் வாய்ப்பை உருவாக்கினார். தொடர்ந்து அங்கே இயங்குவதற்கு ஏற்பாடு செய்தார். ஐ.ந மனித உரிமை அவை, ஐரோப்பிய பாராளுமன்றம் ஆகிய அரங்குகளில் தொடர்ந்து இயங்க தோழர் போஸ்கோ முயற்சி எடுத்து வந்தார். 2018ல் ஸ்டெர்லைட் சம்பவத்திற்காக தனியே அமர்வை ஐ.நா மனித உரிமை அவையில் ஏற்படுத்த கேட்டிருந்தேன். அதை ஒழுங்கமைத்துக் கொடுத்தார். இந்த ஐ.நா அமர்வில் பேசியதற்காக என்மீது தேசதுரோக வழக்கை பதிவு செய்தார்கள். தமிழர்களின் சிக்கல்குறித்து மட்டுமல்லாமல் பிற தேச மக்களின் உரிமைக்காக பேசவும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார் பாஸ்கோ. 

2017ல் கட்டலோனியா பாராளுமன்ற குழுவிடம் தமிழர் உரிமை குறித்து பேச வாய்பை ஏற்படுத்தினார். மற்றும் ஸ்பெயினின் இடதுசாரிகளை சந்தித்து தமிழர் உரிமைக்கான நியாயத்தை எடுத்துச் சொன்னோம். ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து ஆதரவை பெற்றோம். இவையனைத்தையும் செய்தவர் தோழர் போஸ்கோ. 

 நிகாரகுவா வெளியுறவுத்துறை அமைச்சரைச் சந்தித்து தமிழரின் கோரிக்கையை விளக்கி பேச வாய்ப்பை உருவாக்கினார். சில மாதங்களில் நிகாரகுவா நாட்டில் இலங்கை மீது விசாரணை நடத்த வேண்டுமென துர்மானம் கொண்டுவரப்பட்டது. இதுபோல பல தேசங்களின் பிரதிநிதிகளை தொடர்ந்து சந்தித்து தமிழர் சிக்கல்களை விளக்கி நிலைப்பாடு எடுக்க வைத்ததில் போஸ்கோ பங்கு மிக முக்கியமானது. ஸ்டெர்லைட் சிக்கலுக்காக 2018ல் எனது பாஸ்போர்ட் முடக்கப்பட்ட பின்னர், அவரை சந்திக்கும் வாய்ப்பில்லாமல் போனது. 

இந்நிலையில் சில புலம்பெயர் தோழர்கள் மூலமாக தோழர் போஸ்கோ கைது செய்யப்பட்டு ஜெனீவா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் எனும் செய்தியறிந்தோம். ஐ.நா அதிகாரிகள் சிலர், மேற்குலக நாடுகளின் நலன் சார்ந்தவர்கள் இணைந்து பொய்யான குற்றச்சாட்டின் கீழ் தோழர் போஸ்கோ கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தோழர் போஸ்கோவை முடக்கினால் தமிழர்களின் செயல்பாட்டினை முடக்கிவிட முடியுமென இதை செய்திருப்பதாக அறிகிறேன். 

ஸ்விஸ், பிரான்ஸ் தேச புலம்பெயர் அமைப்புத் தோழர்கள் அவரது விடுதலைக்கான முயற்சியை எடுத்து வருகிறார்கள். 

தோழர் போஸ்கோவின் விடுதலைக்காக ஆதரவு தரவேண்டுமென தமிழகத்தின் சனநாயக ஆற்றலை மே17 இயக்கம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். அனைத்து ஈ.ழ ஆதரவு தோழமைகளும் தோழர் போஸ்கோவின் நீதிக்காகவும், தமிழரின் உரிமை போராட்டத்தை முன்னகர்த்தவும் கைகொடுக்க வாருங்கள் என கேட்டுக்கொள்கிறோம். அவரது விடுதலைக்கு ஆதர்வு திரட்ட தலைவர்களை தொடர்ந்து சந்தித்து வருகிறோம். தோழர் போஸ்கோவிற்கு துணை நிற்போம். 

இத்துடன் இணைக்கப்பட்ட புகைப்படங்களில்

* தோழர் போஸ்கோவுடன் 

-திருமுருகன் காந்தி

மே17 இயக்கம்