இலங்கைத் தமிழர்கள் கனடா நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று சாதனை

இலங்கைத் தமிழர்கள் கனடா நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று சாதனை

நேற்றைய தினம் நடைபெற்ற கனடாவின் நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

அந்தவகையில் இத்தேர்தலில் ஆரம்பம் முதலே முன்னிலை பெற்றுவந்த முன்னாள் பிரதமர் ஜட்டீன் ட்ரூடோவின் லிபரல் கட்சி இறுதியில் அபார வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து கனடாவின் இடைக்கால பிரதமராக செயல்பட்ட மார்க் கார்னி, மீண்டும் முழுநேர பிரதமராகக் கடமையாற்றுவார் எனக் கூறப்படுகிறது.

அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதேவேளை குறித்த தேர்தலில் இலங்கை தமிழர்கள் 2 பேர் வெற்றி பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

இத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக 5 இலங்கை தமிழர்கள் வேட்பாளராக களம் இறங்கியிருந்த நிலையில் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்ட இலங்கை தமிழர்களான ஹரி ஆனந்த சங்கரி மற்றும் யுவனிதா நாதன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளமை இலங்கையர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.