கனடாவில் எக்கச்சகமாக அதிகரித்துள்ள வீட்டு வாடகை: வெளியாகியுள்ள சமீபத்திய தகவல்
கனடாவில் வீட்டு வாடகை எக்கச்சக்கமாக அதிகரித்துவருகிறது.
முதன்முறையாக 2,000 டொலர்களை தாண்டிவிட்ட வீட்டு வாடகை
இந்த புதன்கிழமை வெளியான அறிக்கை ஒன்று, கனடாவில் சராசரி வீட்டு வாடகை, முதன்முறையாக, இந்த நவம்பர் மாதத்தில் 2,000 டொலர்களை தாண்டிவிட்டதாக தெரிவிக்கிறது.
மாதம் ஒன்றிற்கு கனேடியர்கள் 2,024 டொலர்கள் வீட்டு வாடகை செலுத்துவதாக சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன. இது கடந்த நவம்பர் மாதத்தை ஒப்பிடும்போது 12.4 சதவிகிதம் அதிகமாகும்.
காரணம் என்ன?
பொதுவாக ரியல் எஸ்டேட்டில் தொய்வு ஏற்பட்டால் அது வாடகைக்கு வீடு தேடுவோருக்கு நல்ல செய்தியாகும். ஏனென்றால், வீட்டு உரிமையாளர்கள் வாடகைக்கு ஆள் கிடைக்காதா என தேடுவார்கள். ஆனால், இப்போது சற்று வித்தியாசமான ஒரு நிலை காணப்படுகிறது.
அதாவது, வட்டி விகிதங்கள் உயர்ந்துவிட்டதால், மக்கள் வீடு வாங்குவதற்கு பதிலாக வாடகைக்கு வீடு தேடத்துவங்கியுள்ளார்கள். அதனால் டிமாண்ட் அதிகரிக்க, இருக்கும் வீடுகளின் வாடகைகளை உயர்த்திவிட்டார்கள் வீட்டு உரிமையாளர்கள்.
தீர்வு என்ன?
Rentals.ca என்னும் அமைப்பின் இயக்குநர்களில் ஒருவரான Paul Danison இந்த வீடு தட்டுப்பாடு பிரச்சினைக்கு ஒரு தீர்வைச் சொல்லுகிறார்.
அதாவது, கோவிடைத் தொடர்ந்து பல அலுவலகங்கள் காலியாக உள்ளன. அவற்றை மக்கள் குடியிருக்கும் வகையில் மாற்றலாம் என்கிறார் அவர்.