கனேடிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினருக்கு இலங்கைக்கு செல்ல விசா மறுப்பு!
கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் கேரி ஆனந்தசங்கரிக்கு இலங்கைக்கு செல்வதற்கு அரசாங்கத்தினால் விசா வழங்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் கேரி ஆனந்தசங்கரிக்கு இலங்கைக்கு செல்வதற்கு அரசாங்கத்தினால் விசா வழங்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் நிலவும் மனித உரிமைகள் பிரச்சினைகள் மற்றும் போர் நிலை சார்ந்த பிரச்சினைகள் தொடர்பான பணிகளுக்காகவே விசா மறுக்கப்பட்டதாக ஆனந்தசங்கரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சுதந்திரமான கருத்துக்கள் அரசாங்கத்திற்கு சார்பாக இருக்கும்போது அவை அனுமதிக்கப்படுகின்றன.
கொடும்பாவிகளை எரிப்பதால், இலங்கை அரசாங்கத்தின் தொடர்ச்சியான தோல்விகளை சரி செய்ய முடியாது.
இலங்கை அரசாங்கம் எனது விசாவை மறுத்தமை வருந்தத்தக்க விடயம். நாம் செய்யும் பணிக்கான பழிவாங்கலாக இதனை கருத முடியும்.
எனவே நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம் என்று அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
கேரி ஆனந்தசங்கரி இலங்கையின் முன்னணி தமிழ் அரசியல்வாதியான வி.ஆனந்தசங்கரியின் புதல்வன் என்பது குறிப்பிடத்தக்கது.