கிழக்கு மாகாணம் செந்தில் தொண்டமானின் அப்பாவின் சொத்து கிடையாது - மலையகத்தில் செய்த விளையாட்டு இங்கு எடுபடாது - அமைச்சர் ஹாபீஸ் காட்டம்
கிழக்கு மாகாணம் என்பது செந்தில் தொண்டமானின் அப்பாவினதோ அல்லது அவரினதோ சொத்து கிடையாது என்று அமைச்சர் ஹாபீஸ் நஷீர் தெரிவித்துள்ளார்.
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் நேற்று (13) இடம்பெற்ற பிரதேச அபிவிருத்தி ஒருக்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
“அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டால் கிழக்கில் கால் பதிக்க விட முடியாது. நான் முதலமைச்சராக இருந்தவன். ஆனால் அரசியல் பழிவாங்கல் நோக்கில் இடமாற்றங்களை வழங்கியது கிடையாது.
மலையகத்தில் செய்த வேலைகளை கிழக்கில் செய்ய விடமாட்டோம். கிழக்கு மாகாணத்தை சீரழிக்க இடமளிக்கமுடியாது” என்று அமைச்சர் ஹாபீஸ் நஷீர் தெரிவித்துள்ளார்.
காத்தான்குடி பிரதேச அபிவிருத்தி ஒருக்கிணைப்புக் குழுக் கூட்டம் இடம்பெற்றபோது காத்தான்குடி கோட்டக் கல்வி அதிகாரியின் இடமாற்றம் தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டது.
அவ்வேளையிலேயே அமைச்சர் ஹாபீஸ் நஷீர் ஆளுநரை கடுமையாக விமர்சித்துள்ளார்.