விண்வெளியில் புதிய சாதனை படைக்கும் இந்தியா - மூன்றாவது முயற்சி வெற்றியளிக்குமா?
நிலவை ஆராயும் இந்தியாவின் விண்வெளி பயணத்தின் ஒரு பகுதியான சந்திரயான் 3 விண்கலம் இன்று (14) பிற்பகல் விண்ணில் ஏவப்பட உள்ளது.
நிலவை ஆராயும் இந்தியாவின் விண்வெளி பயணத்தின் ஒரு பகுதியான சந்திரயான் 3 விண்கலம் இன்று (14) பிற்பகல் விண்ணில் ஏவப்பட உள்ளது.
இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இந்த பணிக்காக 6.5 பில்லியன் இந்திய ரூபாயை செலவிட்டுள்ளது.
13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த முயற்சி வெற்றி பெற்றால், அமெரிக்கா, முன்னாள் சோவியத் யூனியன் மற்றும் சீனாவைத் தொடர்ந்து நிலவில் Soft Landing எனப்படும் மென்மையாக தரையிறங்கும் நான்காவது நாடாக இந்தியா வரலாற்றில் இடம்பிடிக்கும்.
சந்திரயான் 3 விண்கலம் ஸ்ரீ ஹரிக்கோட்டாவில் உள்ள சதிஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து எல்.வி.எம் 3 உந்துகணை மூலம் ஏவப்பட உள்ளது.
இந்த பயணத்தின் மூலம் விண்கலம் அடுத்த மாதம் 24 ஆம் திகதி நிலவை சென்றடைய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.