இந்திய அணியின் தோல்வியை தாழாத இளைஞர் மாரடைப்பால் மரணம்!
உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த சோகத்தில் திருப்பதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்தார்.

குறித்த இளைஞன் இந்தியாவின் திருப்பதியைச் சேர்ந்த ஜோதீஸ் குமார் யாதேவ் என்ற 35 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
தனது வீட்டில் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியை பார்த்துக்கொண்டிருந்த அவர், இந்திய அணி தோல்விடைந்ததை தொடர்ந்து நாற்காலியில் இருந்து கீழே சரிந்துள்ளார்.
இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.