வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றம்!
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று இலங்கை நாடாளுமன்றத்தின் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் ஆதரவாக 122 வாக்குகளும், எதிராக 77 வாக்குகளும் வழங்கப்பட்டன.
இதன்படி, 45 மேலதிக வாக்குகளால் வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றப்பட்டது.
கடந்த 13ஆம் திகதி நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த வருடத்திற்கான வரவு செலவு திட்டத்தை முன்வைத்தார்.
இந்தநிலையில், 14ஆம் திகதி முதல் வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்றது.
அதேநேரம், நாளைய தினம் முதல் 19 தினங்களுக்கு குழுநிலை விவாதம் நடைபெறவுள்ளதுடன், வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு, எதிர்வரும் டிசம்பர் மாதம் 13ஆம் திகதி நடத்தப்படவுள்ளது.