மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி

மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி

நாட்டில் மரக்கறிகளின் விலை சற்று வீழ்ச்சியை பதிவுசெய்துள்ளன.

இதன்படி, கெப்பெட்டிபொல பொருளாதார நிலையத்தில் ஒரு கிலோகிராம் கெரட் 280 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன், ஒரு கிலோகிராம் போஞ்சி 150 ரூபாய்க்கும், ஒரு கிலோகிராம் வெண்டைக்காய் 180 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

அத்துடன் ஒரு கிலோகிராம் தக்காளி 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுவதாக தெரிவிக்கப்படுகின்றது.