வாகன விபத்தில் சிக்கிய நபர் உயிரிழப்பு

பலாங்கொடை - இரத்தினபுரி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றுடன், மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
குறித்த விபத்தில் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.