திருடப்பட்ட கலைப்பொருட்களை இலங்கைக்கு மீளக் கையளித்தல்!
அருங்காட்சியகங்களில் உள்ள மீளக் கையளிக்கப்பட்ட கலைப்பொருட்களை குறித்த அறிவூட்டும் பொது நிகழ்வு மற்றும் கண் காட்சி 27 ஜூலை 2024 அன்று காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை கொழும்பு சிட்டி சென்டர் வரவேற்பு முற்றத்தில் பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
• இந் நிகழ்வில் நெதர்லாந்து அரசு இலங்கைக்கு திருப்பி அனுப்பிய ஆறு கலைப்பொருட்கள் பற்றிய தகவல்கள், மீளக் கையளித்தல் பற்றிய விளக்கங்கள், வீடியோக்கள் மற்றும் சிறுவர் வண்ணம் தீட்டும் பகுதி ஆகியவை அடங்கும்.
• கொழும்பில் உள்ள நெதர்லாந்து தூதரகத்துடன் இணைந்து வரலாற்று உரையாடல் மற்றும் நினைவு கூரலுக்கான குழுமம் இந் நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது .
• இது ஒரு இலவச நிகழ்வும் மேலும் அனைவருக்குமான ஒன்றாகும்
நிகழ்வு என்ன?
கடந்த டிசம்பர் 2023 வருடம், 1765ம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையின் கண்டியிலிருந்து டச்சு கிழக்கிந்திய கம்பெனி (VOC) வீரர்களால் கொள்ளையடிக்கப்பட்ட ஆறு கலைப்பொருட்களை நெதர்லாந்து அரசு இலங்கைக்கு திருப்பி அனுப்பியது.
லெவ்கே பீரங்கி என்று அழைக்கப்படும் ஒரு சிறிய அலங்கரிக்கப்பட்ட பீரங்கி மற்றும் அதன் வண்டி, தங்க வாள், வெள்ளி வாள், தங்க கத்தி மற்றும் இரண்டு துப்பாக்கிகள் ஆகியவை இப் பொருட்களாகும், இவை அனைத்தும் கண்டி ராஜ்ஜியத்திலிருந்து எடுக்கப்பட்டன.
இவை இப்போது கொழும்பு தேசிய அருங்காட்சியகத்தின் சேகரிப்பில் இணைந்துள்ளன. அங்கு அவை அருங்காட்சியகத்தின் முன் காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந் நிகழ்வு இவ் ஆறு கலைப்பொருட்களை திரும்பப் பெறுவதை ஒரு தொடக்கப் புள்ளியாகப் பயன்படுத்தி, மீளக் கையளித்தல் என்ற தலைப்பில் பொதுமக்களுடன் ஈடுபடுவதற்காக எங்களால் ஆரம்பிக்கப்பட்ட தொடரின் ஒரு பகுதியாகும்.
மீளக் கையளித்தல் என்றால் என்ன?
இங்கு, மீளக் கையளித்தல் என்பது அருங்காட்சியகங்களில் உள்ள பொருட்களை அதன் சொந்த நாடுகளுக்கு அல்லது முன்னாள் உரிமையாளர்களுக்கு திருப்பி அனுப்பும் செயல்முறையை குறிக்கிறது.
நெதர்லாந்தில் இருந்து ஆறு பொருட்களை திருப்பி அனுப்பும் இந் நடவடிக்கையானது காலனித்துவத்தால் ஏற்பட்ட வரலாற்று அநீதியை நிவர்த்தி செய்யும் ஒரு முயற்சியாகும்.
முன்னாள் காலனித்துவ சக்திகளால் திருடப்பட்ட, சூறையாடப்பட்ட அல்லது வற்புறுத்தலின் பேரில் கைப்பற்றப்பட்ட அருங்காட்சியகப் பொருட்களைத் மீளக் கையளித்தலைச் சுற்றி நடக்கும் உலகளாவிய உரையாடலின் ஒரு பகுதியாக இது நடைபெறுகிறது.
வரலாற்று உரையாடல் மற்றும் நினைவுகூரலுக்கான குழுமம் (CHDM) என்பது ?
வரலாற்று உரையாடல் மற்றும் நினைவுகூரலுக்கான குழுமம் (CHDM), இலங்கையின் சிக்கலான கடந்த காலத்தை ஆராய்வதற்கும், நிகழ்காலத்தை ஆவணப்படுத்துவதற்கும், மக்களின் தகவல் தேவைகளுக்கு உதவி அளிப்பதும், அறிவு பகிர்தலை ஊக்குவிப்பதற்கும் செயல்முறைகளை வகுப்பதற்கும் செயல்படுத்துவதற்கும் ஒத்துழைப்புடனும் இணைந்தும் செயல்படும் ஒரு சுதந்திரமான பக்கச்சார்பற்ற நிறுவனமாகும். எங்கள் முக்கிய பணிகளாக ஆவணங்கள் காப்பகம் மற்றும் மேலாண்மை, வரலாறு பாட கல்வி சார் நடவடிக்கைகள் மற்றும் அருங்காட்சியகங்கள் ஆகியனவாகும்.
இலங்கையின் அனைத்து மக்களுக்குமான நியாயமான எதிர்காலத்தை உருவாக்க கடந்த காலத்துடன் பணியாற்றுகிறோம்.