கனடாவில் கூட்டத்திற்குள் கார் மோதி விபத்து - பலர் உயிரிழப்பு!

கனடாவில் கூட்டத்திற்குள் கார் மோதி விபத்து - பலர் உயிரிழப்பு!

கனடாவின் மேற்கு நகரமான வான்கூவரில் நடந்த ஒரு திறந்த வெளி நிகழ்வின் போது, நபரொருவர் தான் பயணித்த வாகனத்தை கூட்டத்திற்குள் வேகமாக செலுத்தி விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இந்த சம்பவத்தில் ஒரு குழந்தை உட்பட குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஆறு பேர் காயமடைந்துள்ளதாகவும் சாட்சியங்களை மேற்கொள்காட்டு குளோபல் நியூஸ் தெரிவித்துள்ளது.

எனினும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை இன்னும் உறுதிப்படுத்தாத வான்கூவர் பொலிஸார், சந்தேக நபரை கைது செய்துள்ளதாகவும் எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளனர்.

அந் நாட்டு நேரப்படி சனிக்கிழமை இரவு 8.00 மணியளவில் கூட்டத்தின் வழியாக ஒரு கருப்பு SUV வாகனம் வேகமாக பயணித்து விபத்தை ஏற்படுத்தியதாக சாட்சிகள் விவரிக்கின்றனர்.

என்ன நடந்தது என்பது குறித்து வான்கூவர் பொலிஸார் எந்த விவரங்களையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

ஆனால் கிழக்கு 41வது அவென்யூ மற்றும் ஃப்ரேசர் தெருவில் இரவு 8 மணிக்குப் பின்னர் ஒரு சாரதி கூட்டத்திற்குள் வாகனத்தை ஓட்டிச் சென்றதை அவர்கள் உறுதிப்படுத்தினர்.