24 இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் - காயமடைந்த இந்திய மீனவர்கள் சிகிச்சை பிரிவில் அனுமதி!

இந்தியாவின் கிழக்கு கடற்பகுதியில் வைத்து, 24 இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்து நாகப்பட்டினம் மீனவர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
இலங்கையை சேர்ந்த சிலர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக இந்திய மீனவர்கள் தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்திய கடல் எல்லைப்பகுதியில் வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தாக்குதலில் காயமடைந்த மீனவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
காயமடைந்த 17 மீனவர்கள் நாகை ஒரத்தூர் அரச மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் நிலையில் படுகாயமடைந்த மீனவர்கள் தாக்குதல் நடத்திய கடற்கொள்ளையர்களிடம் உடமைகளை இழந்து கரை திரும்ப முடியாமல் தவித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தங்களை அதிவேக படகில் வந்த குழு ஒன்று சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தியதாக, தமிழக மீனவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். 6 பேர் கொண்ட கடற்கொள்ளையர்கள் குழுவே கத்திமுனையில் தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.