நடிகை சித்ராவின் தந்தை அதிகாலையில் தற்கொலை - காரணம் என்ன?

நடிகை சித்ராவின் தந்தை அதிகாலையில் தற்கொலை - காரணம் என்ன?

சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் நிரபராதி எனவும் இந்த வழக்கில் இருந்து அவரை விடுவிப்பதாக கூறி திருவள்ளூர் மகிளா விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தமையே தந்தையின் உயிரிழப்புக்கு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை காமராஜ் இன்று (31) அதிகாலை கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 

மகள் தற்கொலை செய்துக்கொண்டு இறந்த நிலையில், தற்போது தந்தையும் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா கடந்த 2020 டிசம்பர் 9-ம் திகதி சென்னை பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் உள்ள விருந்தகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 

இதுகுறித்து நசரத்பேட்டை பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

மகள் மரணத்தில் மர்மம் இருப்பதாக சித்ராவின் தந்தை, பொலிஸ்  நிலையத்தில் புகார் அளித்தார். 

இதனையடுத்து, சித்ரா தற்கொலைக்கு அவரது கணவர் ஹேம்நாத் தான் காரணம் என்று கூறப்பட்ட நிலையில், அவர் 2020 டிசம்பர் 15-ம் திகதி கைது செய்யப்பட்டார். 

பின்னர், 2021 மார்ச் 2-ம் திகதி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.  

தொடர்ந்து நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் நிரபராதி எனவும் இந்த வழக்கில் இருந்து அவரை விடுவிப்பதாக கூறி திருவள்ளூர் மகிளா விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.